“தொழில் வளத்தை நாசமாக்கியதே 6 மாத கால விஜய் அரசின் சாதனை” - பழனிசாமி சாடல்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: “தமிழகத்தின் தொழில் வளத்தையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கியதுதான் 6 மாத கால விஜய் அரசின் சாதனை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 2015-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜெயலலிதா வெற்றிகரமாக நடத்தினார். தொடர்ந்து, 2019-லும் மாநாட்டை நடத்தினோம்.

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க 'யாதும் ஊரே' என்ற புதிய திட்டத்தை சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தோம். கடந்த 2020-ல் கரோனா காலத்திலும், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை (ரூ.61 ஆயிரம் கோடி) ஈர்த்த முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்தது.

அதிமுக அரசு வகுத்த மின்வாகனக் கொள்கை காரணமாக ஓசூரில் ஏதர் எனர்ஜி நிறுவனமும், போச்சம்பள்ளியில் ஓலா நிறுவனமும் மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலைகளைத் தொடங்கின.

ஆனால், முதல்வர் விஜய் ஆட்சியில், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளி மாநிலங்களுக்குச் செல்வதின் தொடர்ச்சியாக, 2 வாரங்களுக்கு முன்பு ரூ.1,614 கோடி மதிப்பிலான 3 நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகம் இழந்துள்ள நிலையில், மின் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தென் கொரியாவின் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டையும் இந்த அரசு கோட்டை விட்டுள்ள நிகழ்வு, இளைஞர்களின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்க 21 நாட்களில் ஒப்புதல் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தொழில் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2014-லிலேயே ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களில் விரைவாக அனுமதி அளிக்கும் கட்டமைப்பை ஜெயலலிதா உருவாக்கினார்.

இதைக்கூட தெரிந்துகொள்ளாமல் ரீல்ஸ் மூலம் முதலீடுகளை ஈர்க்கலாம் என்று கதை கட்டும் துறையாக தவெக அரசின் தொழில் துறை விளங்குகிறது.

ஏற்கெனவே, சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை புழக்கத்தை தடுப்பதில் கோட்டை விட்டதுபோல், தமிழகத்துக்கு வரும் முதலீடுகளையும் தொடர்ச்சியாக கோட்டைவிட்டுக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியாளர்களின் திறமையின்மையைக் காட்டுகிறது. தமிழகத்தின் தொழில் வளத்தையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கியதுதான் 6 மாத கால விஜய் அரசின் சாதனை” என்று அவர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>எடப்பாடி பழனிசாமி </p></div>
“தேசிய வில்வித்தை போட்டிகளில் தமிழக வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்க” - அண்ணாமலை

X