“எதிர்க்க வேண்டிய நேரத்தில் பாஜகவை தவெக எதிர்க்கும்” - காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் விஷ்ணு பிரசாத்

“எதிர்க்க வேண்டிய நேரத்தில் பாஜகவை தவெக எதிர்க்கும்” - காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் விஷ்ணு பிரசாத்
Updated on: 
2 min read

புதுச்சேரி: “எதிர்க்க வேண்டிய நேரத்தில் பாஜகவை, தவெக எதிர்க்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்று காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மேலிடப் பார்வையாளர் விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று  புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நவ.1-ம் தேதி நடைபெறும் பேரணியில் குறைந்தது 1,000 காங்கிரஸார் பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளோம்.

இந்தியாவில் ஒரே கட்சி மீண்டும் மீண்டும் எப்படி ஆட்சிக்கு வருகிறது. 2014-ல் எங்களை குறை சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவர் சொன்ன ஊழல் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. மோடி ஆட்சியில் அதானியும், அம்பானியும்தான் பயனடைகிறார்கள்.

தற்போது வாக்களித்த மக்களே சிந்திக்கிறார்கள். நாம் வாக்களிக்கவில்லை, எப்படி மோடி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார் என்று. தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய 3 பேரில் 2 பேர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது சட்டம்.

ஆனால், 2023-ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அதன் மூலம் பிரதமரும், அமித் ஷாவும் சேர்ந்து ஞானேஷ்குமாரை தேர்தல் ஆணையராக நியமித்தனர். இந்த தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு வாக்கு போடாத பட்டியலின, சிறுபான்மையினர், புதிய வாக்காளர்களை குறிவைத்து நிறைய மாநிலங்களில் நீக்கியுள்ளனது.

30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து இதுவரை 13.5 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இதனிடையே இரண்டு தேர்தல் ஆணையர்கள் கடந்த செப்டம்பரில் பொது வெளியில் அளித்த பேட்டியில், தேர்தல் ஆணைய செயல்பாடுகள் தொடர்பாக 10 மாதங்களில் 14 ஆட்சேபனை தெரிவித்துள்ளோம்.

தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் பணிகளில் எங்களை ஈடுபடுத்துவதில்லை. எங்களிடம் ஆலோசிக்கப்படுவதில்லை. எந்த உத்தரவுகளுக்கும் எங்களிடம் கையெழுத்து பெறவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலலை செய்த ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். 13 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். எஸ்ஐஆரை திருத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை மாற்றி பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

மோடி அரசிடம் நியாயத்துக்கு இடமில்லை. போராட்டத்தின் மூலம் மக்களை திரட்டி மிகப்பெரிய புரட்சி வெடித்தால்தான், நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று, போராட்டத்துக்கு ராகுல் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

வாக்காளர்களை நீக்கியது எல்லா தொகுதிகளிலும் நடந்துள்ளது. இதன் மூலம் நாங்கள் அதிக தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கொள்கையில் உறுதியாக இருப்பவர். தேர்தலில் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை எல்லாம் தாங்கிக் கொள்ளக்கூடிய வலிமை அவருக்கு உள்ளது. பாஜக, மோடியை எதிர்க்கும் தைரியம் தமிழக முதல்வருக்கு இருப்பதால்தான், தவெகவுக்கு ஆதரவு கொடுத்து கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இருக்கிறது.

2029-ல் ராகுல் காந்தி பிரதமர் ஆகுவதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவார்கள். பாஜகவை பார்த்து தவெக ஏன்? பயப்பட வேண்டும். பயம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்ஐஆர் கூட்டத்தில் தவெகவும் வெளிநடப்பு செய்தது. அவர்கள் எதிர்க்க வேண்டிய நேரத்தில் பாஜகவை எதிர்ப்பார்கள். நேரம் வரும்போது எங்களது கனவை நினைவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றார்.

பேட்டியின் போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, கார்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

“எதிர்க்க வேண்டிய நேரத்தில் பாஜகவை தவெக எதிர்க்கும்” - காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் விஷ்ணு பிரசாத்
Raghu Thatha: அறிவுஜீவி முகமூடிகளை அம்பலமாக்கும் க.பா - திரை தேவதைகள் 41

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in