“தவெக 234 தொகுதிகளிலும் டிபாசிட் வாங்காது” - அர்ஜுன் சம்பத் கணிப்பு

“தவெக 234 தொகுதிகளிலும் டிபாசிட் வாங்காது” - அர்ஜுன் சம்பத் கணிப்பு
Updated on
2 min read

பழநி: “தவெகவை வைத்து அதிமுக, பாஜகவின் வெற்றி வாய்ப்பை தடுக்க திமுக நினைக்கிறது. இது மக்கள் மத்தியில் எடுபடாது. தவெக 234 தொகுதிகளிலும் டிபாசிட் வாங்காது” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் மற்றும் புலிப்பாணி ஆசிரமத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வியாழக்கிழமை (மார்ச் 19) மாலை சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் முருக பக்தர்களுக்கு எதிராக செயல்படக் கூடிய திராவிடல் மாடல் ஆட்சி மாற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பழநி முருகனிடம் வேண்டுதல் வைத்துள்ளோம்.

காஸ் சிலிண்டர் பதுக்கி வைப்பவர்கள் மீதும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என அவதூறு பரப்புவோர் மீதும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் கவனம் செலுத்தாமல் இரு சிறுவர்களை அழைத்து ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்.

நாட்டில் இந்திய குடியுரிமை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற்று வருகிறது. அதனால் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுக்க முடியாமல் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி அரசியல் சித்து விளையாட்டுக்களை செய்து வருகிறது.

பாஜக, அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளை திசை திருப்புவதே தவெக நோக்கம். கடந்த தேர்தலில் கமலஹாசனை வைத்து பாஜக, அதிமுகவுக்கு வாக்குகளை செல்ல விடாமல் திமுக தடுத்தது. தற்போது தவெகவை வைத்து அதிமுக, பாஜகவின் வெற்றி வாய்ப்பை தடுக்க திமுக நினைக்கிறது. இது மக்கள் மத்தியில் எடுபடாது. தவெக 234 தொகுதிகளிலும் டிபாசிட் வாங்காது.

நாதக சீமான் தனித்து நின்று வெற்றி பெறப் போவதில்லை. திமுகவுக்கு மாற்று அதிமுகதான். தமிழகத்தில் நான்கு முனைப் போட்டியில்லை. இருமுனை போட்டிதான்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும், மு.க.ஸ்டாலின் ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதியை விட 4 ஆண்டுகள் தலை சிறந்த ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். தமிழகத்தில் தேர்தல் நல்ல முறையில், ஜனநாயக முறையில் நடக்க வேண்டுமானால் தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு நடைபெற்று முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.

மத அடிப்படையில் வாக்கு சேகரிப்போரை தடை செய்ய வேண்டும். நாதக தமிழர்களின் அடையாளத்தை மாற்ற நினைக்கிறது. நாதக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன். தமிழகத்தை 4 மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பதை இந்து மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்று அவர் கூறினார்.

“தவெக 234 தொகுதிகளிலும் டிபாசிட் வாங்காது” - அர்ஜுன் சம்பத் கணிப்பு
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in