சென்னையில் விஜய் பிரச்சாரம்: வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்களால் கடும் நெரிசல்

தவெக தலைவர் விஜய் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனக்காக காத்திருந்த புதுமண தம்பதியை பிரச்சார வாகனத்துக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனக்காக காத்திருந்த புதுமண தம்பதியை பிரச்சார வாகனத்துக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

Updated on
1 min read

சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் தவெக வேட்​பாளர்​களை ஆதரித்​து, விஜய் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது வழிநெடு​கிலும் திரண்டு தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

தவெக தலை​வர் விஜய் நேற்று சென்னை மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் சூறாவளிப் பிரச்​சா​ரம் செய்​தார். இதற்​காக நேற்று காலை 10 மணி அளவில், நீலாங்​கரை​யிலுள்ள தனது இல்​லத்​திலிருந்து விஜய் காரில் புறப்​பட்​டார். வழிநெடு​கிலும் திரண்​டிருந்த ரசிகர்​கள் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். ஒரு கட்​டத்​தில் கூட்​டம் அதி​க​மாகக் கூடிய​தால், காரின் மேல் பகு​தி​யில் நின்​றபடி தொண்​டர்​களை நோக்கி அவர் கையசைத்​தார்.

தாம்​பரம் அருகே வந்​த​போது தனது காரிலிருந்து பிரச்​சார வேனுக்கு விஜய் மாறி​னார். அங்​குள்ள வரத​ராஜபுரம், தாம்​பரம், பெருங்​களத்​தூர் ஆகிய பகு​தி​களில் தவெக வேட்​பாளர் சரத்​கு​மாருக்கு ஆதர​வாக அவர் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். இதனால் வண்​டலூர் வெளிவட்​டச் சாலை​யில் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. பின்​னர் அங்​கிருந்து பூந்​தமல்லி வழி​யாக கோயம்​பேடு பகு​திக்கு விஜய் சென்​றார். அங்கு தொண்​டர்​கள் வைத்​திருந்த கட்சி கொடிகளை வாங்கி உயர்த்​திப் பிடித்​த​படியே அவர் சிறிது தூரம் சென்​றார்.

அங்​கிருந்து பொன்​னேரிக்​குச் சென்ற அவர், பொன்​னேரி (தனி) மற்​றும் கும்​மிடிப்​பூண்டி வேட்​பாளர்​கள் ரவி, விஜயகு​மார் ஆகியோரை ஆதரித்​துப் பிரச்​சா​ரம் செய்​தார். பஞ்​செட்டி மற்​றும் சென்னை - கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யில் சுமார் ஒரு கிலோமீட்​டர் தூரம் அவர் ‘ரோடு ஷோ’ மேற்​கொண்​டார். இதனால், அப்​பகு​தி​யில் கடும் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது.

இதனைத் தொடர்ந்து வில்​லி​வாக்​கத்​தில் தவெக வேட்​பாளர் ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு ஆதர​வாக விஜய் பிரச்​சா​ரம் செய்​தார். அங்கு திரண்​டிருந்த ஏராள​மான மக்​கள் அவருக்​குப் பூக்​களைத் தூவி வரவேற்பு அளித்​தனர்.

இதே​போல் விரு​கம்​பாக்​கத்​தில் சபரி​நாதன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், கொளத்​தூரில் வி.எஸ். பாபு என தவெக வேட்​பாளர்​கள் பலருக்கு அவர் ஆதரவு திரட்​டி​னார். இன்று சென்​னை, நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் தவெக-​வின் பொதுக்​கூட்​டம் நடக்கிறது. விஜய் முக்​கிய அறி​விப்​பு​களை வெளி​யிட்​டு இறு​திக்​கட்​ட பிரச்​சாரத்​தை நிறைவு செய்​ய உள்​ளதாக கூறப்படுகிறது​.

<div class="paragraphs"><p>தவெக தலைவர் விஜய் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனக்காக காத்திருந்த புதுமண தம்பதியை பிரச்சார வாகனத்துக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.</p></div>
தேர்தலில் நிற்காத மநீம பிரச்சார பாடல் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in