

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சொந்த குரலில் பாடி பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அங்கம் வகித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் மநீம போட்டியிடவில்லை. ஆனாலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு தொகுதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக “தலைவன் இருக்கிறான்” என்ற பிரச்சார பாடலை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். ‘வெல்லும் படை இது’ என தொடங்கும் இப்பாடலை அவரே பாடியுள்ளார். திமுக கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பிரச்சார பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.