பொதுத் தேர்தலைவிட அதிக வாக்குகளை பெற்ற தவெக: மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

பொதுத் தேர்தலைவிட அதிக வாக்குகளை பெற்ற தவெக: மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
Updated on: 
1 min read

சென்னை: மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்​தேர்​தலில் தவெக கூட்​டணி அமோக வெற்றி பெற்று பொதுத்​தேர்​தலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

தவெக​வின் அரசி​யல் பயணத்​தில் மிக முக்​கிய மான மைல்கல்​லாக பார்க் கப்​பட்ட இந்த இடைத்தேர் தலில் தனது பலத்தை மீண்​டும் நிரூபித்​துள்​ளது. கடந்த பொதுத் தேர்​தலில் தனி​யாக நின்ற தவெக மது​ராந்​தகம் தொகு​தி​யில் 62,090 வாக்​கு​களை பெற்று தோல்​வியை தழு​வியது. அதி​முக 69,284 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றது. பொதுத்​தேர்​தலில் வெற்றி பெற்ற மரகதம் குமர​வேல் தனது பதவியை ராஜி​னாமா செய்து தவெக​வில் இணைந்து மீண்​டும் அதே தொகு​தி​யில் போட்டியிட்டு 74,048 வாக்​கு​களை பெற்று வெற்றி பெற்​றுள்​ளார்

மேலும், திமுக இரண்​டாவது இடத்​துக்​கும், அதி​முக மூன்​றாவது இடத்​துக்கும் தள்​ளப்​பட்​டது. மது​ராந்​தகம் தேர்​தலில் முதல் சுற்றிலிருந்தே முன்​னிலையில் இருந்தார். கடந்த மூன்று தேர்தல்களாக இந்த தொகு​தி​யில் அதி​முக​வில் வெற்றி பெற்ற இவர், இம்​முறை கட்சி மாறிய போதும், தனிப்​பட்ட செல்​வாக்கு மற்​றும் ஆளுங்​கட்​சி​யின் ஆதரவால் வெற்​றி பெற்றார்.

அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் பொதுத்​தேர்​தலில் தவெக 46,438 வாக்​கு​கள் பெற்று தோல்​வியைடைந்​தது. இத்​தேர்​தலில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட சத்​ய​பாமா 81,100 வாக்​கு​கள் பெற்​றார். இவரும் அதி​முக​வில் இருந்து விலகி தவெக​வில் இணைந்து இந்த இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு 66,841 வாக்​கு​கள் பெற்று வென்​றுள்​ளார். இங்​கும் திமுக 2-வது இடமும், அதி​முக 3-ம் இடமும் பிடித்​தன.

தாராபுரத்​தில் முதலில் சத்​ய​பாமா முன்​னிலை​யில் இருந்​தா​லும், இடை​யில் அதி​முக​வின் பானு​மதி முன்​னிலை பெற்​றார். சத்​ய​பாமா இரண்​டாம் இடம் பிடித்​தார். ஆனால், 5-வது சுற்​றில் இருந்து மீண்​டும் நிலைமை மாறி, தவெக முதலிடத்தை பிடித்​தது.

இந்​தத் இடைத்​தேர்​தலில், தாராபுரத்​தில் கிராமப்​புறங்​களை​விட நகர்ப்​புறங்​களில் தவெக​வுக்கு அதி​களவிலான வாக்​கு​கள் கிடைத்​துள்ளது வாக்கு எண்​ணிக்கை மூலம் கணிக்​கப்​பட்​டுள்​ளது. இது தவிர, காங்​கிரஸ், விசிக, ஐயூஎம்​எல் போன்ற கூட்​ட​ணிக் கட்​சிகளின் வாக்​கு​களை தவெக வசம் உள்​ள​தால் இந்த வெற்றி என்​பது எளி​தில் கிடைக்​கப் பெற்​ற​தாகக் கூறப்​படு​கிறது.

மேலும், முதல்​வர் விஜய் பிரச்​சா​ரம் மற்​றும் ரோடு ஷோ மக்​கள் மத்​தி​யில் மீண்​டும் தவெக​வின் அலை வீசி இருப்​ப​தாக​வும் கடந்த 4 மாத கால ஆட்சிக்கு கிடைக்​கும் வரவேற்​பும்தான் இந்த இடைத்​தேர்​தலில் தவெக வேட்பாளர் வெற்​றிக்கு காரணம் என்​றும்​ அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரிவிக்​கின்​றனர்.

பொதுத் தேர்தலைவிட அதிக வாக்குகளை பெற்ற தவெக: மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in