அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு தவெக துணை பொதுச் செயலாளர் பதவி

தவெக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கடம்பூர் ராஜு, வைகைச் செல்வன், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், கே.வி.ராமலிங்கம்,  சந்தீப் ஆனந்த்.

தவெக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கடம்பூர் ராஜு, வைகைச் செல்வன், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், கே.வி.ராமலிங்கம், சந்தீப் ஆனந்த்.

Updated on: 
1 min read

சென்னை: தவெக துணை பொதுச்செயலாளர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு புதிய பதவி வழங்கி அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ். எம்.ஆனந்தன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.ஆனந்தன், கடம்பூர் ராஜூ, கே.டி.பச்சைமால், வெல்லமண்டி நடராஜன்,என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், எஸ்.வளர்மதி ஆகியோர் துணை பொதுச்செயலாளர் களாக நியமிக்கப்படுகின்றனர்.

இதேபோல், சந்தீப் ஆனந்த், கே.ஜி.முத்து வெங்கடேஸ் வரன், தொள்ளமூர் கண்ணன், வி.சி.ஆர் குமரன் ஆகியோரும் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுகின்றனர்.

மேலும், மடத்துக்குளம் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக சி.மகேந்திரன் நியமிக்கப்படுகிறார். புதிய நிர்வாகிகளுக்கு மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தவெக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கடம்பூர் ராஜு, வைகைச் செல்வன், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், கே.வி.ராமலிங்கம்,  சந்தீப் ஆனந்த்.</p></div>
பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in