பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நகைகளின் மதிப்பு ரூ.1.25 கோடி என தகவல்
பணம், நகைகளைக் காட்டி ரீல்ஸ் வெளியிட்ட மதுமிதா.

பணம், நகைகளைக் காட்டி ரீல்ஸ் வெளியிட்ட மதுமிதா.

Updated on: 
1 min read

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில், 118 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் விஐபி கார்டனை சேர்ந்தவர் தொழிலதிபர் வினோத்குமார் (30). இவரது மனைவியும், பிரபல யூடியூபருமான மதுமிதா (27), அதிக பார்வையாளர்களை கவர்வதற்காக வித்தியாசமான வகையில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வந்தார்.

குழந்தைக்கு பணத்தால் அபிஷேகம்

இவர் தனது வீட்டில் 500 ரூபாய் பணத்தை கட்டுகட்டாக வாரி பணமழை பொழிவது போன்றும், தனது மகளுக்கு பணத்தால் அபிஷேகம் செய்வது போலவும், தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் அதிக அளவில் காட்டியும் வீடியோ எடுத்து, அதை ரீல்ஸாக பதிவிட்டு வந்தார்.

இது பார்வையாளர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், மதுமிதா, தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார்.

<div class="paragraphs"><p>கொள்ளை நடந்த வீடு.</p></div>

கொள்ளை நடந்த வீடு.

நள்ளிரவு வீடு திரும்பிய போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 118 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

நாகர்கோவில் டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திருட்டுக்கு காரணம்

மதுமிதாவின் வீட்டில் திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.1.25 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மதுமிதா அதிக நகைகளை அணிந்தவாறும், கட்டுக்கட்டாக பணத்தையும் காட்டி ரீல்ஸ் வெளியிட்டு தனது வீட்டில் அதிக நகை, பணம் இருந்ததை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதுதான் திருட்டு சம்பவத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தனிப்படை அமைப்பு

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

<div class="paragraphs"><p>பணம், நகைகளைக் காட்டி ரீல்ஸ் வெளியிட்ட மதுமிதா.</p></div>
தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ்குமார் விலகக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in