தமிழுக்கு துரோகம்: திமுக அரசு மீது தவெக விமர்சனம்

தமிழுக்கு துரோகம்: திமுக அரசு மீது தவெக விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: கட்​டாய தமிழ் பாடத்​தில் 85 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வி அடைந்​துள்​ளது தமிழுக்கு திமுக செய்த துரோகத்​தின் வெளிப்​பாடு என தவெக கொள்கை பரப்பு பொதுச் செய​லா​ளர் அருண்​ராஜ் விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: திமுக ஆட்​சி​யில் முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கான போட்​டித் தேர்​வில் கட்​டாய தமிழ் பாடத்​தில் 85 ஆயிரம் பேர் தோல்​வியடைந்திருக் கிறார்​கள்.

இது தமிழை காப்பாற்​றுகிறேன் என வெற்று வசனம் பேசும் ஆட்​சி​யின் தோல்வி. நடை​முறை​யில் தமிழ் எந்த அளவுக்கு வளர்க்​கப்​பட்​டிருக்​கிறது என்​ப​தற்​கும் இந்த தேர்வு முடிவு​கள் சாட்​சி.

தமிழை வைத்து பிழைப்பு நடத்​தும் திமுக தனது முந்​தைய ஆட்​சிக் காலங்​களி​லும் இப்​போதும் தமிழுக்கு செய்த துரோகத்​தின் வெளிப்​பாடு தான் இது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

தமிழுக்கு துரோகம்: திமுக அரசு மீது தவெக விமர்சனம்
பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in