

மாநகராட்சி கூட்டத்தில் விசில் ஊதிய கவுன்சிலர் . படம்: மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அண்மையில் திமுகவிலிருந்து தவெகவுக்கு மாறிய கவுன்சிலர் அல்லாபிச்சை மாநகராட்சி கூட்டத்தில் விசில் ஊதியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவரை 2 கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, 19-வது வார்டு கவுன்சிலர் அல்லாபிச்சை கூட்ட அரங்கினுள் நுழைந்தார். அப்போது, கழுத்தில் அணிந்திருந்த விசிலை ஊதிக்கொண்டு வந்தார்.திமுக கவுன்சிலராக இருந்த அவர், கடந்த சில நாட்களுக்குமுன் தவெக எம்எல்ஏ ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தார்.
இந்நிலையில், மாநகராட்சி கூட்டத்தில் அவர் விசில் ஊதியபடி வந்ததற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேயர் எச்சரித்தும் விசில் ஊதியதால், மாமன்றம் போராட்ட களம் போல் மாறியது. அவை மரபை மீறியதாக அல்லாபிச்சை கூட்டங்களில் பங் கேற்க கூடாது என சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.