“இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது” - பெ.சண்முகம்

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on
1 min read

திருவள்ளூர்: “தேர்தல் முடிவுகள் வந்த 20 நாட்களில் பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெறக் கூடாது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுகிறோம். தேர்தல் முடிவுகள் இடதுசாரிகளுக்கு ஆதரவாக அமையும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. நாங்கள் அரசுக்கு ஆதரவு மட்டுமே கொடுக்கிறோம். இடதுசாரிகள் இணைந்து செயல்படுகிறோம். தேர்தல் முடிவுகள் வந்த 20 நாட்களில் பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாக்கு கேட்டு வருகிறார்கள்.

எதற்கு ராஜினாமா செய்தனர், மீண்டும் ஏன் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். இது தான் என் கேள்வி. பொறுப்பற்ற முறையிலும், நெறிமுறை தவறியும் அவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.

மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது. தவெக வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் வெற்றி பெறக் கூடாது. அப்படி அவர்கள் தப்பித் தவறி மீண்டும் வெற்றி பெற்றால் திமுக, அதிமுகவில் இருந்து பலரும் ராஜினாமா செய்வதும், இடைத்தேர்தல் வருவதும் பின்னர் அவர்கள் தவெகவில் இணைவதும் நடக்கும். எனவே, இந்த இரண்டு வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தத் தேர்தலின் முதன்மையான கடமை.

அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அதே வேளையில், 4 மாத காலத்தில் தவெக அரசை எதிர்த்து கூடுதலாக போராடிய ஒரு கட்சியை சொல்லுங்கள். உடன்படுகிற விசியத்தில் ஆதரிக்கிறோம். முரண்படுகிற விஷயத்தில் எதிர்க்கிறோம். இந்த அணுகுமுறை தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பெ.சண்முகம்</p></div>
ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனை காவலில் எடுத்து விசாரிக்க மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in