ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனை காவலில் எடுத்து விசாரிக்க மனு

வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன்

வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன்

Updated on
1 min read

சென்னை: ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன், வீரமணி உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் இருவருரையும் முன்று நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், ‘ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் எடுத்து விசாரித்த வீரமணி அளித்த தகவலின் பெயரில் இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இன்னும் எத்தனை சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு நாட்களாக குற்றம் நடந்தது, வேறு யார் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

எனவே, இருவரையும் மூன்று நாட்கள் தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பத்மா முன்பு இன்று மாலை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. இதனையடுத்து சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

<div class="paragraphs"><p>வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன்</p></div>
அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி: தமிழகம் முழுவதும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணசாமி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in