சோத்துப்பாறை அணை மடையை திறந்து அத்துமீறிய தவெகவினர்: நீர்வளத்துறையினர் போலீஸில் புகார்

சோத்துப்பாறை அணையின் மதகில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ.

சோத்துப்பாறை அணையின் மதகில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ.

Updated on: 
1 min read

பெரியகுளம்: தேனி மாவட்​டம் பெரியகுளத்​தில் இருந்து 9 கி.மீ. தொலை​வில் அமைந்​துள்​ளது சோத்​துப்​பாறை அணை. பெரியகுளம் மட்​டுமல்​லாது தென்​கரை, லட்​சுமிபுரம், தாமரைக்​குளம் உள்​ளிட்ட பகுதி​களின் குடிநீர் மற்​றும் பாசன நீர் ஆதா​ர​மாகவும் விளங்​கு​கிறது. இதன்​மூலம் 2 ஆயிரத்து 865 ஏக்​கர் விளை நிலங்​கள் பாசன வசதி பெறுகின்​றன.

இந்த ஆண்டு வடகிழக்​குப் பரு​வ​மழை, கடந்த அக்.15-ம் தேதி தொடங்​கியது. தொடர்ந்து கனமழை பெய்​ததால் நீர்​மட்​டம் வெகு​வாக உயர்ந்து கடந்த மாதம் 22-ம் தேதி நிரம்பி வழியத் தொடங்​கியது.

இந்த உபரிநீர் அணை​யில் இருந்து சற்று தூரத்​தில் உள்ள அத்​தி​முருகு எனும் இடத்​தில் உள்ள மதகை சென்​றடைகிறது. பின்பு அங்​கிருந்து குடிநீர் மற்​றும் பாசனத்​துக்கு பிரிந்து செல்​லும் வகை​யில் மடை அமைக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக அரசு சார்​பில் அணை​யில் இருந்து பாசனத்​துக்கு நீர் திறக்க இன்​னமும் அரசாணை வெளி​யிட​வில்லை.

இந்​நிலை​யில் சமூக வலை​தளங்​களில் தவெக நிர்​வாகி​கள் உள்​ளிட்ட சிலர் இந்த மடையைத் திறந்து மலர் தூவி பாசனத்​துக்​காக நீர் திறக்​கப்​பட்​ட​தாக ரீல்​ஸ்​கள் பர​வின.

அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இது குறித்து நீர்​வளத்​துறை​யினரிடம் விசா​ரித்​ததில் பாசனத்​துக்​காக இன்​னமும் நீர் திறக்​க​வில்லை என்​பது தெரிய வந்​தது.

இது குறித்து விவசாயிகள் கூறும்​போது, ‘தவெக தேனி மாவட்ட இணைச் செய​லா​ளர் ஷேக் அலி தலை​மையில் பாசனத்​துக்கு நீர் திறந்​த​தாக சமூக வலை​தளங்​களில் வீடியோ பர​வின. விசா​ரித்​ததில் நீர் திறப்​புக்கு இன்​னமும் அரசாணை வர​வில்லை என்று தெரிய வந்​தது’ என்​றனர்.

இது குறித்து பெரியகுளம் பொதுப்​பணித்​துறை செயற்​பொறி​யாளர் அன்​பரசனிடம் கேட்​டபோது, ‘சோத்​துப்​பாறை அணை​யில் இருந்து வெளியேறும் உபரி நீர் தற்​போது அணை​யில் இருந்து வெளியேறிச் சென்று கொண்​டிருக்​கிறது. ஆனால் பாசனத்​துக்கு என்று தனியாக இன்​னமும் நீர் திறக்​க​வில்லை. மழை குறைந்து இந்த உபரிநீர் வெளியேறாவிட்​டால் மடைக்கு நீர் செல்​லாது. ஆகவே, முறைப்​படி அரசாணை பெற்ற பிறகே நீர் திறக்​கப்​படும்’ என்​றார்.

இந்​நிலை​யில் பாசன மடை திறக்​கப்​பட்​டதை உறுதி செய்த நீர்​வளத்​துறை​யினர் தென்​கரை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். உதவி செயற்​பொறி​யாளர் மனோஜ்குமார் அளித்த புகாரில் அடை​யாளம் தெரியாத சிலர் அத்​து​மீறி சென்று பாசன மடையை திறந்​துள்​ளனர். இது குறித்து நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்று அதில் தெரி​வித்​துள்​ளார்.இதனடிப்​படை​யில் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>சோத்துப்பாறை அணையின் மதகில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ.</p></div>
“ஒரு தொண்டனை கூட வாங்க முடியாது” - ரகுபதிக்கு தவெக பதிலடி

X