“ஒரு தொண்டனை கூட வாங்க முடியாது” - ரகுபதிக்கு தவெக பதிலடி

தவெக மாநில செய்தி தொடர்பாளர் சவுந்தரராஜா

தவெக மாநில செய்தி தொடர்பாளர் சவுந்தரராஜா

Updated on: 
1 min read

சென்னை: மக்​களை மடைமாற்ற எம்.எல்.ஏக்​கள் அதிருப்தி என பொய்​குற்​றச்​சாட்டை முன்​வைப்​பவருக்கு ஒரு தொண்​டனை கூட விலைக்கு வாங்க முடி​யாது என முன்​னாள் அமைச்​சர் ரகுப​திக்கு தவெக மாநில செய்தி தொடர்​பாளர் சவுந்​தரராஜா பதில் அளித்​துள்​ளார்.

தவெக​வில் 70 எம்.எல்.ஏக்​கள் அதிருப்​தி​யில் இருக்​கின்​றனர். அவர்​கள் தான் ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்த உள்​ளனர். தவெக ஆட்சி கவிந்த பிறகு நடை​பெறும் தேர்​தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும் என முன்​னாள் அமைச்​சர் ரகுபதி தெரி​வித்த நிலை​யில் இதற்கு தவெக மாநில செய்தி தொடர்​பாளர் சவுந்தரராஜா பதிலளித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் கூறிய​தாவது: தவெக எம்.எல்.ஏக்​கள் அதிருப்​தி​யில் இருப்​ப​தாக கூறி மக்​களை மடைமாற்​றம் செய்​யும் வேலை​யில் திமுக இறங்​கி​யுள்​ளது. குதிரை பேரம் நடத்​து​வது, எம்.எல்.ஏக்​களை விலைக்​கு​வாங்​கு​வது என்​பது திமுக​விற்கு கைவந்த கலை​யாகும். அதிமுக​வில் இருந்த அனிதா ராதாகிருஷ்​ணன், செந்​தில்​பாலாஜி, ஓபிஎஸ், சேகர்​பாபு போன்ற ஊழல்​வாதி​களை இணைத்து அரசி​யல் செய்​வது யார்.

உதயசூரியன் சின்​னத்​தில் வென்ற மதிமுக எம்.எல்.ஏவை மிரட்டி திமுக​வில் இணைய வைத்​தது யார். தவெக எம்.எல்.ஏக்​கள் இல்லை; தொண்​டனை கூட விலைக்கு வாங்க முடி​யாது. ஆட்சி மாற்​றம் வரும், அடுத்து நாம் தான் என நினைக்​கும் உங்​களின் பகல் கனவு பலிக்​காது. இவ்​வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>தவெக மாநில செய்தி தொடர்பாளர் சவுந்தரராஜா</p></div>
“தவெக அதிருப்தி எம்எல்ஏக்களால் ஆட்சி மாற்ற சூழல் ஏற்படலாம்” - ரகுபதி கணிப்பு

X