

கனிமொழி எம்.பி
தூத்துக்குடி: கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, திமுக ஜென்ஸி-யில் செயல்பட்ட இளைஞர்கள் என, தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.
தற்போது, தனது கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது, ‘பெண்களின் பாதுகாவலர்’ என்று கூறி, வாக்கு வாங்கிய தவெக அரசு. இவ்வாறு தெரிவித்துள்ளார்.