“தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா?” - கனிமொழி எம்.பி

கனிமொழி  எம்.பி

கனிமொழி எம்.பி

Updated on: 
1 min read

சென்னை: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா என்றும், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்றும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், திமுகவையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.

இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் விஜய் , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கனிமொழி  எம்.பி</p></div>
“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” - முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை

X