

சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதியாக பிப். 14 -ம் தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலானோரால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ம் தேதி வரை விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.