“பெண்களுக்கு சர்ப்ரைஸ்.. மக்கள் விரோதிகளுக்கு ஷாக்!” - இது என் ஸ்டைல் என ஸ்டாலின் பெருமிதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நேற்று மாலை திமுக மண்டல வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நிர்வாகிகள்  வெள்ளி செங்கோல் வழங்கினர். படம்:ந.சரவணன்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நேற்று மாலை திமுக மண்டல வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நிர்வாகிகள் வெள்ளி செங்கோல் வழங்கினர். படம்:ந.சரவணன்

Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இம் மாநாட்டில் 8 வருவாய் மாவட்டங்களில் இருந்து 47 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து 1.50 லட்சம் தொண்டர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வரும் தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றி வாய்ப்பை தேடித் தர இங்கு வந்துள்ள உங்களை பார்க்கும்போது எனக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. 47 தொகுதிகளில் இருந்து வந்துள்ள நீங்கள் திமுக கூட்டணி வெற்றிபெற அடுத்த 2 மாதங்களுக்கு ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டும்.

உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளேன். கடந்த தேர்தலில் என்னவெல்லாம் செய்வோம் என சொல்லி வாக்கு கேட்டோம். இந்த தேர்தலில் எதையெல்லாம் செய்துள்ளோம், சொல்லாததை தாண்டி செய்துள்ள நம் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து நாம் சந்தித்த தேர்தலில் நாம் சாதாரண வெற்றி பெறவில்லை. எதிரிகளின் சதிகளை முறியடித்து சரித்திர வெற்றியை நாம் அடைந்துள்ளோம். 2026-ம் தேர்தலில் திமுகவின் ‘‘2.O’’ தொடங்கிவிட்டது. நாம் செய்த சாதனை மேல் உள்ள நம்பிக்கையிலும், உங்கள் மீது உள்ள நம்பிக்கையை வைத்து சொல்கிறேன். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான். தமிழக அரசியல் வரலாற்றில் நாம் அடையப்போகும் வெற்றியை அரசியல் ஆய்வாளர்களே வியக்கும் அளவுக்கு தேர்தல் வெற்றி இருக்க வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு சர்ப்ரைஸ். மக்கள் விரோதிகளுக்கு நான் கொடுத்த ஷாக். இது தான் என் ஸ்டைல். மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கு எந்த அறிவிப்பும் இல்லை. இதை பற்றி பழனிசாமி பேச தயாராக இல்லை. அவர், என்னை சவாலுக்கு அழைக்கிறார். பாஜகவின் கிளைக்கழகம் தான் அதிமுக. துணிவு இல்லாத பழனிசாமி சட்டம்-ஒழுங்கு பற்றி பேசுகிறார். அதிமுகவை மக்கள் நம்பமாட்டார்கள்.

புறவாசல் வழியாக தமிழகத்துக்குள் நுழைய நினைக்கும் பாஜக எண்ணத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும் அல்லாமல், அதை தடுத்து நிறுத்த வேண்டும். மீண்டும் வெல்லப்போவது நாம் தான். மீண்டும் வருவோம், மீண்டும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

திமுகவில் சேர்ந்தார் நிலோபர் கபீல்: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபீல், பழனிசாமி ஆட்சியிலும் அமைச்சராக தொடர்ந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இருப்பினும், மீண்டும் அதிமுகவுக்கே அவர் திரும்பினார்.

அதிமுகவில் போதுமான முக்கியத்துவம் இல்லாததால் மீண்டும் திமுகவில் இணைய முடிவு எடுத்த நிலோபர்கபீல் நேற்று ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.

<div class="paragraphs"><p>திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நேற்று மாலை திமுக மண்டல வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நிர்வாகிகள்  வெள்ளி செங்கோல் வழங்கினர். படம்:ந.சரவணன்</p></div>
பிப்.21-ல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறார் பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in