“அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக அணி வெற்றி பெறும்” - வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Updated on: 
1 min read

திருநெல்வேலி: “இனி வரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக தலைமையிலான அணியே வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி திட்டமிடப்பட்ட காலம் வரை முழுமையாக தொடரும். எதிர்காலத்திலும் தவெக ஆட்சி மலரும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி டெல்டா பகுதிக்கு பேராபத்தை விளைவிக்கும் மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் தொடர்ச்சியான பேச்சுக்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் வகையில் மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மறைமுகமாக மத்திய மோடி அரசு துணை போகிறது. இது தொடர்பாக மதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து 17-ம் தேதி தென்காசியில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அன்றைய அரசு கூலிப்படையை போல காவல்துறையை ஏவிவிட்டது. ஆனால் தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அந்த ஆலைக்கு அனுமதி வழங்காமல் உறுதியாக நிற்பதை பாராட்டுகிறேன்.  தூத்துக்குடி துப்பாக்கிக் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கி முதல்வர் விஜய் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுள்ளார். 

உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் நூலகத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது. பெரியார் போன்ற தலைவர்களின் பெயரை கொண்ட நூலகங்கள் மற்றும் அறிவுச் சோலைகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்ட குப்பைகளை எழுதி ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கமிஷன் அமைத்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும்.

தற்போதைய தவெக அரசில் பல்வேறு துறைகளில் ஆன்லைன் முறைகள் வந்தபிறகு முறைகேடுகள் தடுக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தவெக தலைமையிலான அணியே வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி திட்டமிடப்பட்ட காலம் வரை முழுமையாக தொடரும். எதிர்காலத்திலும் தவெக ஆட்சி மலரும் என்றார்.

<div class="paragraphs"><p>மதிமுக&nbsp;பொதுச்செயலாளர் வைகோ</p></div>
Avihitham: பெண்கள் மீது கதைகட்ட துடிக்கும் ஆணுலகமும், நிம்மியும் கீதாவும்| திரை தேவதைகள் 44

X