பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன் 

டிடிவி தினகரன் 

Updated on
1 min read

சென்னை: கோவை சிறுமி படுகொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன.

எனவே,கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதல்வர் விஜயை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>டிடிவி தினகரன்&nbsp;</p></div>
கரூர் | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - 10 இடங்களில் குண்டு பாய்ந்து காயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in