‘விஜய் நடத்துவது குதிரை பேர ஆட்சி’ - டிடிவி தினகரன் விமர்சனம்

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

Updated on: 
1 min read

மதுராந்தகம்: மது​ராந்​தகத்​தில் அதி​முக வேட்​பாளரை ஆதரித்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட அமமுக தலை​வர் டிடிவி தினகரன், தவெக ஆட்சி குதிரை பேரம் ஆட்சி என விமர்ச்​சித்​தார்.

மது​ராந்​தகம் அதி​முக வேட்​பாளர் கணிதா சம்​பத்தை ஆதரித்து சரவம்​பாக்​கம் பகு​தி​யில் டிடிவி தினகரன் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ஆட்​சியை பிடிக்க முடி​யாத​தால் தமிழக மக்​களை பழி​வாங்கும் நோக்​கத்​துடன் காங்​கிரஸ் தவெக​வுடன் சென்​றுள்​ளது. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர்​தான் தவெகவை கடுமை​யாக விமர்ச்​சித்து வரு​கின்​றனர். அவர்​களும் தவெக ஆதர​வளித்​தவர்​கள்​தான்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிச்​சாமி, பொறுமையை கடைபிடிக்​கிறார். தவெக பக்​கம் செல்ல முயற்​சித்த 25 எம்​எல்​ஏக்​கரின் நிலை தற்​போது என்​ன​வாகி​யுள்​ளது. ஏன், என் கட்​சியைச் சேர்ந்த எம்​எல்​ஏவை விலைக்கு வாங்கியவர்​கள்​தான் தவெக​வினர்.

தவெக ஆட்சி குதிரை பேரம் ஆட்​சி​யைத்​தான் நடத்தி வரு​கின்​றனர். அனை​வரை​யும் கூட்டுக் களவாணி​கள் என்று முதல்​வர் கூறுகிறார். இங்​கிருந்து சென்ற அதி​முக எம்​எல்​ஏக்​கள் பணம் மற்​றும் பதவிக்​காகத்​தான் அங்கு சென்​றனர். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p><em> டிடிவி தினகரன்</em></p></div>
“எம்ஜிஆர், ஜெ. போல திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in