“தனித்து​ விடப்பட்டவர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” - டிடிவி வலியுறுத்தல்

மதுரை கேகே.நகரிலுள்ள சிலைக்கு மாலை அணிவிக்க திறந்த வேனில் டிடிவி.தினகரன் வந்த காட்சி. படம் எஸ்.கிருஷ்ண​மூர்த்​தி.

மதுரை கேகே.நகரிலுள்ள சிலைக்கு மாலை அணிவிக்க திறந்த வேனில் டிடிவி.தினகரன் வந்த காட்சி. படம் எஸ்.கிருஷ்ண​மூர்த்​தி.

Updated on
1 min read

தனித்​து​ விடப்​பட்​ட​வர்​கள் உணர்ந்து எங்​களுக்கு ஆதர​வளிக்​கவேண்​டும் என, மதுரை​யில் டிடி​வி. தினகரன் கூறி​னார்.

மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் பிறந்​த​நாளை​யொட்டி மதுரை கேகே. நகரிலுள்ள அவரது சிலைக்கு அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது; தமிழகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைக்​கவேண்​டும் என்​ப​தற்​காக முழு மனதுடன் தமிழகம், புதுச்​சேரி​யிலும் ஒன்​றிணைந்​துள்​ளோம். தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் இணைத்து இருக்​கிறோம். கடந்த 10 ஆண்​டாக கொள்கை கூட்​டணி என்ற திமுக -காங்​கிரசில் கூட்​ட​ணி​யில் உடன்​பாடு ஏற்​பட​வில்​லை.

அது தொடருமா என்​பதே தெரி​யாத நிலை உள்​ளது. இதை திசை திருப்​பவே தேசிய ஜனநாயக கூட்​டணி வலு​வில்​லை. அங்கு குழப்​பம் உள்​ளது என, பொய் பிரச்​சா​ரம் செய்யப்படுகிறது. ​காங்​கிரஸ் கட்சி 35 முதல் 40 தொகு​தி​கள் கேட்​கின்​றனர். கூட்​டணி மந்​திரி சபை அமைக்​கவேண்​டும் என, கேட்​கின்​றனர் என்​பது தான் உண்​மை. திமுக ஒத்​துக்​கொள்​ள​வில்​லை. அக்​கூட்​டணி தொடருமா என்​பதே தெரிய​வில்​லை.

நான் தேர்​தலில் போட்​டி​யிட​வில்லை என, அறி​வித்து உள்​ளேன். தேவையற்ற குழப்​பத்தை தவிர்க்​கவே போட்டி யிட​வில்​லை. எவ்​வித மன வருத்​த​மும் இல்​லாமல் அம்​மா​வின் ஆட்சி அமைய வேண்​டும். பாஜக வழி​காட்​டு​தலில் செயல்​பட்​டு, அதி​முக​வில் இடங்​களை பெறு​வோம். அம்​மா​வின் ஆட்சி உறு​தி​யாக அமை​யும்.

தமிழகத்​தில் ஊழல், மக்​களுக்கு பாது​காப்பு இல்​லாத திமுக ஆட்​சியை முடிவுக்கு கொண்டு வரவே ஓரணி​யில் இணைந்​துள்​ளோம். தமிழக மக்​கள் நாங்​கள் வலு​வான கூட்​டணி என்​பதை உணர்ந்​துள்​ளனர். ஓபிஎஸ் தனிப்​பட்ட முறை​யில் எல்லா உரிமை​யும் உள்​ளது. அவர் எந்த கூட்​ட​ணி​யில் வேண்​டு​மா​னாலும் போட்​டி​யிடலாம். அது அவரது விருப்​பம்.

ஆனால் சட்​டமன்​றத்​தில் அவர்​கள் எம்​ஜிஆர், ஜெயலலி​தா​வின் ஆசி​யோடு திமுக மீண்​டும் ஆட்சிக்கு வரும் என்று சொன்​னதை அம்​மா​வின் தொண்​டர்​கள் ஏற்​க​மாட்​டார்​கள். அதி​முகவை உரு​வாக்​கியதே திமுக​வுக்கு எதி​ராகத்​தான்.

50 ஆண்​டுக்கு மேலாக திமுக எதிர்ப்​பிலுள்ள எங்​களது தலை​வர்​கள், தொண்​டர்​களை அவமானப்​படுத்​து​வது போன்று பேசி​யதை கண்​டிக்​கிறோம். 99.1 சதவீதம் அனை​வரும் ஓரணி​யில் இருக்​கிறோம். ஒருசிலர் தனித்​து​விடப்​பட்​ட​வர்​கள் உணர்ந்து அவர்​களும் எங்​களுக்கு ஆதர​வளிக்​கவேண்​டும்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>மதுரை கேகே.நகரிலுள்ள சிலைக்கு மாலை அணிவிக்க திறந்த வேனில் டிடிவி.தினகரன் வந்த காட்சி. படம் எஸ்.கிருஷ்ண​மூர்த்​தி.</p></div>
​மாநிலங்களவை எம்​.பி. பதவி வேண்டாம் - 8 தொகுதிகளை கேட்கும் ஜி.கே.வாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in