

திருச்சி பழைய பால் பண்ணை அருகே திறக்கப்படவுள்ள தவெக தேர்தல் அலுவலகம்.
படம்:ர.செல்வமுத்துகுமார்
தவெக தலைவர் விஜய் போட்டியிடு வதால் தமிழகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்துக்கு நிர்வாகிகள் இதுவரை நியமிக்கப்படாததால் விசில் சப்தம் இல்லாமல் மவுனமாக இருக்கிறது.
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட ஏப்.2-ம் தேதிவேட்புமனுதாக்கல் செய்த விஜய், அன்று மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட், தஞ்சாவூர் சாலை, அரியமங்கலம், பால் பண்ணை, செந்தண்ணீர்புரம், பொன்மலை ஜி கார்னர், டிவிஎஸ் டோல்கேட், விமான நிலையம் வரை பிரச்சார வேனில் இருந்தபடி வாக்குகள் சேகரித்தார். பிறகு, சென்னை சென்றுவிட்டார்.
அதன்பின், தவெக நிர்வாகிகள் யாரும் இதுவரை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால், அதேசமயம், இந்தத் தொகுதியின் திமுக, அதிமுக, நாதக வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலுக்கே சவால் விடும் வகையில் வீதி வீதியாக, வீடு வீடாக ஏறி இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தவெக தொண்டர்கள் தங்களது. விசில் சின் னத்தை மவுனமாக பார்த்தபடி காத்திருக்கின்றனர். ஏனென்றால் கிழக்கு தொகுதிக்கு என்று தவெகவில் ஒரு மாவட்டச் செயலாளர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை.
தொகுதி தேர்தல் பொறுப்பாளர் என்றும் யாரையும் அறிவிக்க வில்லை.காந்திமார்க்கெட் அருகே மகா லட்சுமி நகரில் தவெகவின் தேர்தல் பணிமனைக்காக ஒரு கட்டிடம் தயார் செய் யப்பட்டது. திருச்சி வந்த விஜய் அதை திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. பணிகள் முடிவடையாததால் தேர்தல் பணிமனையை விஜய் திறந்து வைக்க வில்லை. தற்போதும் பணிகள் நிறைவடையாத காரணத் தால் தேர்தல் பணிமனை வெறிச்சோடி கிடக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால் கிழக்கு தொகுதி யில் வெற்றி பெறுவது எப்படி என புலம்பு கின்றனர் தவெக தொண்டர்கள். இத்தனைக்கும் விஜய்க்கு தலைமை ஏஜென்ட்டாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். இவர் லால்குடி தொகுதி வேட்பிரளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகுதியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இது குறித்து மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, "திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றி உறுதி செய் யப்பட்ட ஒன்று. நாங்கள் சென்று ஓட்டு கேட்டுதான் விஜய் வெல்ல வேண்டும் என்ற நிலை இங்கு இல்லை ஆனாலும் ஏப்.8-ம் தேதி விஜய் திருச்சி வருவதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துவோம்" என்கின்றனர்.