திரளும் கட்சி தலைவர்கள்... திக்குமுக்காடும் திருச்சி!

திரளும் கட்சி தலைவர்கள்... திக்குமுக்காடும் திருச்சி!
Updated on
1 min read

திருச்சி: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெற இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், துணை முதல்வர் உதயநிதி என அரசியல்கட்சித் தலைவர்கள் திருச்சிக்கு அணிவகுத்து வருவதால் தேர்தல் களம் தகிக்க தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப்.18) மாலை திருச்சி வருகிறார். துறையூரில் பெரம்பலூர் புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.

அதேபோல, நாளை (ஏப்.19) கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோவை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேலும், இதே தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யும், நாளை(ஏப்.19) 3 இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அடுத்தநாள் (ஏப்.20) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

மேலும், திருச்சி மேற்கு, கிழக்கு தொகுதிகளில் விசிக தலைவர் திருமாவளவன் நாளை மாலையும், திருச்சி உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஏப்.20-ம் தேதியும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக திருச்சியில் முகாமிடும் அரசியல்கட்சி தலைவர்களால் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு தேர்தல் களம் தகிக்க தொடங்கியுள்ளது.

திரளும் கட்சி தலைவர்கள்... திக்குமுக்காடும் திருச்சி!
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in