கோயம்பேட்டில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ரயில்வே, தனியாருக்கு வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்

கோயம்பேட்டில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ரயில்வே, தனியாருக்கு வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: கோ​யம்​பேட்​டில் சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில், சுத்​தி​கரிக்​கப்​பட்ட கழி​வுநீரை ரயில்வே மற்​றும் தனி​யார் நிறுவன பயன்​பாட்​டுக்கு வழங்க வேண்​டும் என, நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் ககன்​தீப்​சிங் பேடி, அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில், 342 கழி​வுநீரேற்று நிலை​யங்​கள் மற்​றும் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் மூலம், கழி​வுநீர் சுத்​தி​கரிக்​கப்பட்டு வரு​கிறது.

கோயம்​பேட்​டில் செயல்​பட்டு வரும் நாளொன்​றுக்கு 45 மில்​லியன் லிட்​டர் உற்​பத்​தித் திறன் கொண்ட 3-ம் நிலை எதிர்​மறை சவ்​வூடு பரவல் முறை (TTRO) சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தில், அண்​ணாநகர், கோடம்​பாக்​கம், அம்​பத்​தூர், வளசர​வாக்​கம் ஆகிய பகு​தி​களி​லிருந்து சேகரிக்​கப்​படும் கழி​வுநீர் சுத்​தி​கரிக்​கப்​பட்​டு, தொழிற்​சாலைகளின் பயன்​பாட்​டுக்​காக சென்​னையி​லிருந்து 60 கி.மீ. தொலை​வில் உள்ள சிப்​காட் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான இருங்​காட்​டுக்​கோட்​டை, பிள்​ளைப்​பாக்​கம், வல்​லம் வடகல், பெரும்​புதூர் மற்​றும் ஒரகடம் ஆகிய பகு​தி​களில் அமைந்​துள்ள தொழிற்​சாலைகளுக்கு தினசரி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யத்​தில், சுத்​தி​கரிக்​கப்​படும் நீரின் தரம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள தரத்​தின் அடிப்​படை​யில் உள்​ளதா என, நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி நேற்​று​முன்​தினம் ஆய்வு செய்தார்.

இந்​நிலை​யத்​தில், சுத்​தி​கரிக்​கப்​படும் நீரின் தரம் சரி​யான அளவில் இருப்​ப​தால், இந்​நீரைக் கொண்டு வாக​னங்​கள் மற்​றும் ரயில் பெட்​டிகளை சுத்​தப்​படுத்​துதல், வணிக வளாகங்​கள், திரையரங்​கு​கள், மருத்​து​வ​மனை​கள், உணவகங்​கள் ஆகிய​வற்​றில் பயன்​படுத்​தப்​பட்டு வரும் மையப்​படுத்​தப்​பட்ட குளிரூட்​டும் அமைப்​பு​களில் இந்​நீரை பயன்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகளை அலு​வலர்​கள் மேற்​கொள்ள வேண்​டும் எனவும், கட்​டு​மான பணி​களுக்​கும் சுத்​தி​கரிக்​கப்​பட்ட நீரை பயன்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கை​யை​யும் மேற்​கொள்ள வேண்​டும் எனவும் அறி​வுறுத்​தி​யுள்​ளார். வளாகத்தை தூய்​மை​யாக பராமரிக்குமாறும் அறி​வுறுத்​தி​னார்.

இதனைத்​தொடர்ந்​து, கோயம்​பேட்​டில் செயல்​பட்டு வரும் நாளொன்​றுக்கு 60 மில்​லியன் லிட்​டர் மற்​றும் 120 மில்​லியன் லிட்​டர் சுத்​தி​கரிப்பு திறன் கொண்ட கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களின் செயல்​பாடு​களை நேரில் ஆய்வு செய்​தார்.

சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் த.ஆனந்த், பொறி​யியல் இயக்​குநர் உ.பர்​வீஸ், தலை​மைப் பொறி​யாளர்​கள் ஏ.ரா​தாகிருஷ்ணன், கு.​பா.வைதேகி, மேற்​பார்வை பொறி​யாளர்​கள் எஸ்​.பி.ஜெயப்​பிர​காஷ், கு.​ராமமூர்த்தி உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

கோயம்பேட்டில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ரயில்வே, தனியாருக்கு வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்
பாமகவின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in