அந்நிய முதலீட்டுக்கு தவெக அரசு உரிமை கோர முடியாது: டிஆர்பி ராஜா கண்டனம்

அந்நிய முதலீட்டுக்கு தவெக அரசு உரிமை கோர முடியாது: டிஆர்பி ராஜா கண்டனம்
Updated on: 
1 min read

சென்னை: முன்​னாள் அமைச்​சர் டிஆர்பி ராஜா வெளி​யிட்​டுள்ள எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறியுள்ளதாவது: நடப்பு நிதி ஆண்​டின் ஏப்​ரல் - ஜூன் காலாண்​டில் தமிழகம் 5.95 பில்​லியன் டாலர் அந்​நிய நேரடி முதலீட்​டைப் பெற்று முதலிடம் பிடித்​துள்​ளது.

இதை தனது சாதனை என தவெக உரிமை கோரு​கிறது. ஸ்டா​லின் தலை​மையி​லான முந்​தைய திமுக அரசின் தொடர் உழைப்​பால் உரு​வான கட்​டமைப்பு வேகமே தமிழகத்​தின் இந்த சாதனைக்​குக் காரணம் என வணிக நாளிதழ்​கள் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளன.

எனவே, அவசரப்​பட்டு வெற்றி உலா வரு​வதற்​குப் பதிலாக, 5.95 பில்​லியன் டாலர் முதலீட்​டின் நிறு​வனம் சார்ந்த விவரங்​களை​யும், அதற்​கான ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தான தேதி​களை​யும் வெளி​யிட்​டால் பெருமை யாருக்கு சேர வேண்​டும் என்​பது தெளி​வாகும்.

அந்​நிய நேரடி முதலீடு என்​பது பல கட்டங்​களாக நடை​பெறும் ஒரு தொடர் நடவடிக்​கை. எங்​களது உழைப்​புக்​கான மதிப்​பீட்டை வேறு யாரோ உரிமை கோர முடி​யாது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

அந்நிய முதலீட்டுக்கு தவெக அரசு உரிமை கோர முடியாது: டிஆர்பி ராஜா கண்டனம்
ஏரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது வழக்குப்பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in