ஏரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது வழக்குப்பதிவு

ஏரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது வழக்குப்பதிவு
Updated on: 
1 min read

திருவண்ணாமலை: திரு​வண்​ணா​மலை அடுத்த மலப்பாம்​பாடி கிராமத்​தில் கடந்த 2025-ம் ஆண்டு திமுக இளைஞர் அணி மாநாடு நடை​பெற்​றது.

இந்த மாநாட்​டுத் திடலைச் சீரமைக்க முன்​னாள் பொதுப்​பணித் துறை அமைச்​சர் எ.வ.வேலு, சட்ட விரோத​மாக ஏரி மண், கிராவல் மண்ணை கடத்​தி​ய​தாக அறப்​போர் இயக்​கம் சார்​பில் சென்னை லஞ்ச ஒழிப்​புத்​துறை​யில் புகார் அளிக்​கப்​பட்​டது.

அந்த புகாரில், மலப்​பாம்​பாடி கிராமத்​தில் 2025-ம் ஆண்டு திமுக இளைஞர் அணி மாநாடு நடத்​து​வதற்​கு, மாநாட்​டுத் திடலைச் சீரமைக்க முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, தனது அதி​காரத்​தைத் தவறாகப் பயன்​படுத்​தி, மலப்​பம்​பாடி ஏரி​யில் 8 ஏக்​கர் பரப்​பள​வில் சுமார் 45,72,058 கன அடி மணல் மற்​றும் கிராவல் மண் வெட்டி எடுக்​கப்​​பட்​டது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடியே 22 லட்​சத்து 97 ஏழா​யிரத்து 44 இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. மேலும், சட்​ட​விரோத மண் கடத்​தல் குறித்து சமூக ஆர்​வலர் அருள் ஆறு​முகம் உள்​ளிட்​டோர் புகைப்பட ஆதா​ரங்​களு​டன் புகார் அளித்த போதி​லும், வரு​வாய்த் துறை, மாநக​ராட்சி மற்​றும் சுரங்​கம், புவி​யியல் துறை அதி​காரி​கள் எந்​த​வித நடவடிக்​கை​யும் எடுக்​காமல் அலட்​சி​ய​மாகச் செயல்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

போலீ​ஸார் சோதனை

இந்த ஏரி மண் கடத்​தலில் திரு​வண்​ணா​மலை மக்​களவை தொகுதி உறுப்​பினரும், திமுக இளைஞர் அணி அமைப்​பாள​ரு​மான சி.என்​.அண்​ணாதுரை குடும்ப உறுப்​பினர் மூலம் செயல்​பட்டு வரும் ஏபியு நிறு​வனத்​திற்கு சொந்​த​மான வாக​னங்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, செப்​.25-ம் தேதி திரு​வண்​ணா​மலை​யில் உள்ள அவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் சோதனை மேற்​கொண்டு முக்​கிய ஆவணங்​களைக் கைப்​பற்றி எடுத்​துச் சென்​றனர்.

அதன் அடிப்​படை​யில், திரு​வண்​ணா​மலை லஞ்ச ஒழிப்​புத் துறை அலு​வல​கத்​தில், ஊழல் தடுப்பு சட்​டத்​தின் கீழ் முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மற்​றும் அரசு அலு​வலர்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள், தனி​நபர்​கள் மீதும்​ வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது.

ஏரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது வழக்குப்பதிவு
சென்னையில் அக்.2-ம் தேதி அண்ணாமலை தலைமையில் அறியப்படாத சாதனை பெண்களுக்கு விருது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in