எழும்பூரில் இருந்து ஏப்.5-ம் தேதி முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்

பயணிகள் நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு
எழும்பூரில் இருந்து ஏப்.5-ம் தேதி முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்
Updated on
1 min read

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேம்​பால அடித்​தளப் பணி முடிவடைந்​துள்​ள​தால், ஏப்​.5-ம் தேதி முதல் 10, 11-வது நடைமேடைகளில் வழக்​கம்​போல புறநகர் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.735 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, பிரம்​மாண்ட நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி நடந்து வரு​கிறது. இதற்கு அடித்​தளம் அமைக்​கும் பணி காரண​மாக, 10, 11-வது நடைமேடைகள் மூடப்​பட்​டன. இதனால், கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்டு தடத்​தில் கடந்த பிப்​.19-ம் தேதி முதல் 44 மின்​சார ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 10, 11-க்கு பதிலாக, 5, 6-வது நடைமேடைகளில் புறநகர் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

வழக்​க​மான ரயில் சேவை குறைக்​கப்​பட்​டு, தற்​காலிக கால அட்​ட​வணைப்​படி, 20 நிமிடங்​களுக்கு ஒரு மின்​சார ரயில் இயக்​கப்​படு​கிறது. இது மட்​டுமின்​றி, இரு மார்க்​கத்​தி​லும் எழும்​பூர் நோக்​கிச் செல்​லும்​போது ரயில்​கள் தாமத​மாக இயக்​கப்​படு​கின்​றன. இது​மட்​டுமின்​றி, எழும்​பூர், சென்ட்​ரலுக்கு உரிய நேரத்​தில் செல்ல முடி​யாமல் விரைவு ரயில்​களை தவற​விடும் நிலை​யும் ஏற்​படு​கிறது. இதனால், பயணி​கள் கடும் அவதி​யடைந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் 10, 11-வது நடைமேடைகளில் இருந்து வழக்​க​மான புறநகர் மின்​சார ரயில் சேவை ஏப்​.5-ம் தேதி முதல் தொடங்​கும் என்று ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது:

எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் 10, 11-வது நடைமேடைகளில் நடை மேம்​பால அடித்​தளப் பணி முடிந்​துள்​ளது. எனவே, ஏப்​.5-ம் தேதி முதல், 10, 11-ம் நடைமேடைகளில் மின்​சார ரயில் சேவை மீண்​டும் இயங்க தொடங்கும். நடை மேம்​பாலம், நகரும் படிக்​கட்​டு, குடிநீர் வசதி ஆகியவை உள்​ளன. நிழற்​குடைகள் பின்​னர் அமைக்​கப்​படும். இதற்​கான பணி​கள் இரவில் நடை​பெறும். சாய்வு பாலம் அடுத்த 15 நாட்​களில் அமைக்​கப்​பட்​டு​விடும். பழைய அட்​ட​வணைப்​படி மின்சார ரயில் சேவை இயங்​கத் தொடங்​கும். இதனால், நெரிசல், தாமதமின்​றி மக்​கள்​ பயணிக்​கலாம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

எழும்பூரில் இருந்து ஏப்.5-ம் தேதி முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்
வெளிநாட்டு பங்களிப்பு மசோதா: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in