பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
Updated on
1 min read

சென்னை: பங்​குனி பெரு​விழாவை முன்​னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பங்​குனிப் பெரு​விழா நேற்று முன்​தினம் கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

வரும் 29-ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்​ட​மும், அடுத்த நாளான 30-ம் தேதி மதி​யம் 2.30 மணிக்கு அறு​பத்து மூவர் உற்​சவ​மும் நடை​பெறுகிறது.

அடுத்த மாதம் 1-ம் தேதி வரை பல்​வேறு விழாக்​கள் அடுத்​தடுத்து நடை​பெற உள்​ளன. இவ்​விழாக்​களை முன்​னிட்டு ஒவ்​வொரு உற்​சவ​மும் தொடங்​கும் நேரம் முதல் நிறைவடை​யும் வரை பக்​தர்​களின் வருகை எண்​ணிக்​கைக்கு ஏற்ப போக்​கு​வரத்து மாற்​றங்​கள் அமல்​படுத்​தப்பட உள்​ள​தாக சென்னை போக்​கு​வரத்து போலீ​ஸார் அறி​வித்​துள்​ளனர்.

குறிப்​பாக, கபாலீஸ்​வரர் கோயிலை சுற்​றி​யும், அதன் போக்​கு​வரத்து வழித்​தடங்​களி​லும் போக்​கு​வரத்து மாற்​றம் அமல்​படுத்​தப்பட உள்​ளது.

மேலும், கோயில் அருகே பக்​தர்​களின் வசதிக்​காக வாகனங்களை நிறுத்​துவதற்கான வசதி​களும்​ செய்​யப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது: அமமுக, பாஜக கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in