ராஜபாளையத்தில் ராஜுக்கள் சமூகம் சார்பில் பாரம்பரிய கொத்தலு திருவிழா கொண்டாட்டம்

ராஜபாளையத்தில் கொத்தலு பண்டிகைக்காக சாமைக் கதிர்களை எடுத்துச் சென்ற ராஜுக்கள் சமூகத்தினர்.

ராஜபாளையத்தில் கொத்தலு பண்டிகைக்காக சாமைக் கதிர்களை எடுத்துச் சென்ற ராஜுக்கள் சமூகத்தினர்.

Updated on
1 min read

ராஜபாளையம்: ​விருதுநகர் மாவட்​டம் ராஜ​பாளை​யத்​தில் ராஜுக்​கள் சமூகம் சார்​பில் பாரம்​பரிய கொத்தலு திருவிழா நேற்று கொண்​டாடப்​பட்​டது.

விவ​சா​யம் செழிக்​க​வும், சண்​டை, சச்​சர​வு​களை மறந்து உறவு​களைப் புதுப்​பிக்​கும் நோக்​கிலும், சாமைக்​க​திர் விளை​யும் காலத்​தில் கொத்தலு என்ற புதி​யல் விழா ராஜ​பாளை​யம் ராஜுக்​கள் சமூகம் சார்​பில் பாரம்​பரிய​மாக கொண்​டாடப்​படு​வது வழக்​கம்.

ஊர் மக்​கள் சார்​பில் சாமைக்கதிர்​களை அறு​வடை செய்​து,ஒவ்​வொரு வீட்​டுக்​கும் வழங்​கு​வார்​கள். அந்​தக் கதிர்​களை வீட்​டில் வைத்து பூஜித்​து, மாவிளக்​கு, கொழுக்​கட்​டை, பானகம் வைத்து வழிபட்​டு, வீட்​டுக்கு வரும் உறவினர்​களுக்கு வழங்​கு​வர்.

காலப்​போக்​கில் இக்​கொண்​டாட்​டம் மறைந்து சம்​பி​ரதாய​மாக நடந்து வந்​தது. நீண்ட காலத்​துக்​குப் பின்​னர் நடப்​பாண்டு இப்​பண்​டிகையை மீள் உரு​வாக்​கம் செய்​யும் முயற்​சி​யாக ஊர்த் தலை​வர்​கள் ஒன்று கூடி, மதுரை மாவட்​டம் உசிலம்​பட்டி அருகே ஒரு ஏக்​கர் பரப்​பில் சாமைப் பயிர் சாகுபடி செய்​து, அறு​வடை செய்​து, சிறு சிறு கட்​டு​களாக ராஜ​பாளை​யம் கொண்டு வந்​தனர்.

பின்​னர், சக்​க​ராஜா கோட்​டை, சிங்​க​ராஜா கோட்​டை, பழைய பாளை​யம், திரு​வனந்​த​புரம் ஆகிய 4 கோட்டை சாவடிகளில் இருந்து நேற்று காலை சாமைக் கதிர் கட்​டு​களை தலை​யில் வைத்து ஊர்​வல​மாக வீடு​களுக்கு எடுத்​துச் சென்​றனர்.

வீட்​டில் வைத்து பூஜை செய்த பின்​னர், உறவினர்​கள் வீடு​களுக்​குச் சென்று அவற்றை வழங்கி மகிழ்ந்​தனர்​.ராஜபாளையத்தில் கொத்தலு பண்டிகைக்காக சாமைக் கதிர்களை எடுத்துச் சென்ற ராஜுக்கள் சமூகத்தினர்.

<div class="paragraphs"><p>ராஜபாளையத்தில் கொத்தலு பண்டிகைக்காக சாமைக் கதிர்களை எடுத்துச் சென்ற ராஜுக்கள் சமூகத்தினர்.</p></div>
நாகை மாவட்டத்தில் மழைநீர் வடியாததால் 2,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in