நாகை மாவட்டத்தில் மழைநீர் வடியாததால் 2,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

நாகை மாவட்டம் கீழப்​பி​டாகை​யில் வயலில் தண்​ணீர் தேங்​கிய​தால் அழுகிய நெற்​ப​யிர்​களு​டன் விவ​சாயிகள்.

நாகை மாவட்டம் கீழப்​பி​டாகை​யில் வயலில் தண்​ணீர் தேங்​கிய​தால் அழுகிய நெற்​ப​யிர்​களு​டன் விவ​சாயிகள்.

Updated on
1 min read

நாகப்​பட்​டினம்: கனமழை ஓய்ந்து 10 நாட்​களுக்கு மேலாகி​யும் நாகை மாவட்​டத்​தில் வயலில் தேங்​கிய மழைநீர் வடி​யாத​தால் 2,000 ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெற்​ப​யிர்​கள் முற்​றி​லும் அழுகி சேதமடைந்​துள்​ளன.

நாகை மாவட்​டத்​தில் 1.62 லட்​சம் ஏக்​கருக்​கும் அதி​க​மான பரப்​பில் சம்​பா, தாளடி நெற்​ப​யிர்​கள் சாகுபடி செய்​யப்​பட்​டிருந்​தன. இந்​நிலை​யில், வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​த​தா​லும், வங்​கக் கடலில் உரு​வான டிட்வா புயல் காரண​மாக​வும் டெல்டா மாவட்​டங்​களில் அதி​க​ன மழை பெய்​தது.

இதனால், நாகை மாவட்​டத்​தில் உள்ள விளைநிலங்​கள் முழு​வதும் மழைநீர் சூழ்ந்து கடல்​போலக் காட்​சி​யளித்​தன. குறிப்​பாக, 40 முதல் 60 நாட்​களான சம்பா பயிர்​களும், 20 முதல் 30 நாட்​களான தாளடி பயிர்​களும் முற்​றி​லும் மழைநீரில் மூழ்​கின.

மழை நின்ற பிறகு வயலில் தேங்​கிய மழைநீரை வடிய​வைக்​கும் பணி​யில் விவ​சா​யிகள் ஈடு​பட்​டனர். ஆனால், கனமழை ஓய்ந்து 10 நாட்​களுக்கு மேலாகி​யும் கீழையூர் வட்​டாரத்​துக்கு உட்​பட்ட கீழப்​பி​டாகை, காரப்​பி​டாகை, மகிழி, கருங்​கண்​ணி, திரு​மணங்​குடி, ஈசனூர் உள்​ளிட்ட பகு​தி​களில் 2,000 ஏக்​கர் பரப்​பில் சம்பா மற்​றும் தாளடி பயிர்​கள் சாகுபடி செய்​யப்​பட்ட வயல்​களில் மழைநீர் வடிய​வில்​லை.

விளை நிலங்​கள் முழு​வதும் தண்​ணீர் நிறைந்​துள்​ள​தால் பயிர்​கள் முற்​றி​லும் அழுகி சேதமடைந்​துள்​ளன. இதுகுறித்து அப்​பகுதி விவ​சா​யிகள் கூறிய​தாவது: வாய்க்​கால்​களை தூர் வாராத​தா​லும், ஆகா​யத்​தாமரை அதிக அளவில் மண்​டி​யுள்​ள​தா​லும் வயல்​களில் தேங்​கிய நீர் வடிய​வில்​லை. இதனால் 2,000 ஏக்​கரில் பயி​ரிடப்​பட்ட பயிர்​கள் அழுகி சேத​மாகி​விட்​டன.

இதுவரை பயிர் பாதிப்பு குறித்து அதி​காரி​கள் யாரும் ஆய்வு செய்​ய​வில்​லை. ஏக்​கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்​துள்ள நிலை​யில், அவை முற்​றி​லும் அழுகிய​தால், மீண்​டும் மறு நடவு செய்​யக்​கூடிய சூழல் ஏற்​பட்​டுள்ளது. தண்​ணீர் வடிவதற்கு மேலும் 10 நாட்​களுக்கு மேலாகும் என்​ப​தால், விவ​சா​யத்​தைக் கைவிடக்​கூடிய சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

ஏற்​கெனவே கடன் பெற்​றும், நகைகளை அடகு​வைத்​தும் சாகுபடி செய்த நிலை​யில், மீண்​டும் விவ​சாயப் பணி​களை மேற்​கொள்ள நிதி​யின்றி விவ​சா​யிகள் தவிக்​கின்​றனர்.

எனவே, பயிர் பாதிப்பு குறித்து கணக்​கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்​கு​வதுடன், பயிர்க் காப்​பீடு இழப்​பீட்​டுத் தொகையை பெற்​றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு விவ​சா​யிகள் தெரி​வித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>நாகை மாவட்டம் கீழப்​பி​டாகை​யில் வயலில் தண்​ணீர் தேங்​கிய​தால் அழுகிய நெற்​ப​யிர்​களு​டன் விவ​சாயிகள்.</p></div>
குடியரசு தலைவர் டிச.17-ல் வேலூர் வருகை: ஸ்ரீபுரம் தங்கக்கோயில் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in