மத்திய பட்ஜெட் குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதிருப்தி

மத்திய பட்ஜெட் குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதிருப்தி
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு வணிகர் சங்​கங்​களின் பேரமைப்​பின் மாநில தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா நேற்று வெளியிட்ட செய்​திக் குறிப்​பு: மத்​திய பட்​ஜெட்​டுக்​கான ஆக்​கப்​பூர்​வ​மான ஆலோ​சனை​களை​யும், அரசு வரு​வாய் அதி​கரிப்​புக்​கான சாத்​திய கூறுகளை​யும் பேரமைப்பு சார்​பில் நிதி​யமைச்​சகத்​துக்கு முன்​னரே சமர்ப்​பித்​திருந்​தோம்.

அந்த ஆலோ​சனை​கள் புறக்​கணிக்​கப்​பட்​டிருப்​பது வருத்​தத்​துக்​குரியது. மேலும், தொழில் வணிகர்களுக்கான வணிகர்களின் நலன் காக்​கின்ற எந்த ஒரு செய்​தி​யும் பட்​ஜெட்​டில் இடம் பெறாதது, மேலும் வருத்​தம் அளிக்​கிறது.

வணி​கர்​களின் தொடர் கோரிக்​கைகளான அரசு ஊழியர்​களுக்கு இணை​யான அதி​கார பகிர்​வின் மூலம், அரசின் பயன்​கள் வணி​கர்​களுக்கு அளிக்​கப்பட வேண்​டியது கட்​டா​யம் என்​பதை மத்​திய, மாநில அரசுகள் கருத்​தில் கொள்ள வேண்​டும்.

வரியை வசூலிக்​கின்ற பணி​யை​யும், அரசு கரு​வூலத்​திற்​கான வரியை தாங்​களே செலுத்​துகின்ற இரு​வழி பாதை​யாக இருக்​கின்ற வணி​கர்​களை பாது​காக்​கின்ற பட்​ஜெட்​டாக இல்​லை. ஒட்​டுமொத்​த​மாக மகிழ்ச்​சி​யும், வருத்​த​மும் கலந்த பட்​ஜெட். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதிருப்தி
விவசாயிகளுக்கு பிப்.15 முதல் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை: அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in