விவசாயிகளுக்கு பிப்.15 முதல் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை: அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு பிப்.15 முதல் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை: அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பயிர் காப்​பீட்டுக்​கான இழப்​பீட்​டுத் தொகையை ​விவ​சா​யிகளுக்கு பிப்​.15 முதல் வழங்க வேண்​டும் என்று அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர் செல்​வம் அறிவுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து வேளாண்மை துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: விவ​சா​யிகளுக்கு பயிர் காப்​பீட்​டுக்​கான இழப்​பீட்​டுத் தொகையை உடனடி​யாக வழங்​குதல் குறித்த ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் 2025 குறுவை பரு​வத்​தில் நெற்​ப​யிர் அறு​வடை பரிசோதனை விவரம், கணக்​கீடு செய்​யப்​பட்ட சராசரி மகசூல் விவரம் தயார் செய்து காப்​பீட்டு நிறு​வனங்​கள் தகுதி வாய்ந்த விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கில் தொகையை பிப்​.15-ம் தேதி முதல் வரவு வைக்க வேண்​டும் என்று அமைச்​சர் அறி​வுறுத்​தி​னார்.

அதே​போல், சம்பா நெல் பயிர் அறு​வடை பரிசோதனை விவரம் 34 மாவட்​டங்​களில் 39,428 முறை நடத்​தப்பட வேண்​டும். இதில் தற்​போது 25 சதவீதம் முடிவுற்​றுள்​ளது. மீத​முள்ள 75 சதவீதம் முடிவுற்​றவுடன் பயிர் காப்​பீட்டு இழப்​பீட்​டுத் தொகை வழங்​கப்​படும்.

மேலும், சமீபத்​தில் வெள்ள பாதிப்​புக்​குள்​ளான நாகை, திரு​வாரூர் மாவட்​டங்​களில் உள்ள கிராமங்​களுக்கு ஒரு​வார காலத்​தில் இழப்​பீட்​டுத் தொகை வழங்​க வேண்​டும் எனவும் அமைச்​சர் அறி​வுறுத்தி உள்​ளார்.

இந்​தக் கூட்​டத்​தில் வேளாண்மை துறை செயலர் வ.தட்​சிணா​மூர்த்​தி, இயக்​குநர் பி.​முரு​கேஷ் உள்​ளிட்ட அரசு உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்.

விவசாயிகளுக்கு பிப்.15 முதல் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை: அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்
சென்​னை​யில் 2 நாட்களில் போதைப் பொருள் விற்பனை செய்த, கடத்​திய 105 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in