கோவையில் நாளை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கோவையில் நாளை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்
Updated on
1 min read

கோவை: கோவையில் நாளை (ஏப்​.18) ஒரே நாளில் வெவ்​வேறு இடங்​களில் பிரதமர் மோடி, முதல்​வர் ஸ்டா​லின் ஆகி​யோர் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​கின்​றனர். தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் களை​கட்​டி​யுள்​ளது.

வாக்​குப்​ப​திவு தினம் நெருங்​கு​வதைத் தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் நட்​சத்​திர பேச்​சாளர்​கள் கோவை​யில் அடுத்​தடுத்து பிரச்​சா​ரம் செய்ய உள்​ளனர்.

11 தொகுதி வேட்பாளர்கள்

கோவை மாவட்​டத்​தில் மொத்​த​முள்ள 10 தொகு​தி​களில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் சார்​பில், 9-ல் அதி​முக வேட்​பாளர்​களும், ஒரு தொகு​தி​யில் (கோவை வடக்​கு) பாஜக வேட்​பாள​ரும் போட்​டி​யிடு​கின்​றனர். திருப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள அவி​நாசி (தனி) தொகு​தி​யில் பாஜக சார்​பில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் போட்​டி​யிடு​கிறார்.

அவி​நாசி தொகு​தி​யின் குறிப்​பிட்ட பகு​தி​கள், கோவை மாவட்​டம் அன்​னூரில் வரு​கிறது. எனவே, 11 தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை ஆதரித்​து, கோவை கொடிசியா மைதானத்​தில் மாலை 5 மணிக்கு நடை​பெறும் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசுகிறார்.

பழனிசாமி பங்கேற்பு

அவருடன் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​களும் பங்​கேற்​கின்​றனர். பிரதமரின் ரோடு ஷோ இது​வரை முடிவு செய்​யப்​பட​வில்லை என கோவை பாஜக​வினர் தெரி​வித்​தனர்.

பிரதமரின் வரு​கை​யை ஒட்​டி, கோவை கொடிசியா மைதானத்​தில் பிரம்​மாண்ட பந்​தல், மேடை, பல ஆயிரம் பேர் அமரும் வகை​யில் இருக்​கைகள், மின்​விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்​ளிட்​டவை ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. மாநகர போலீஸ் உயர​தி​காரி​கள் பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்​து​வரு​கின்​றனர்.

முதல்வர் 2-ம் கட்ட பிரச்சாரம்

திமுக கூட்​ட​ணி​யில் திமுக 7 தொகு​தி​களி​லும், காங்​கிரஸ் 2, கொமதேக ஒரு தொகு​தி​யிலும் போட்​டி​யிடு​கின்​றன. முதல் கட்​ட​மாக கடந்த வாரம், கொடிசியா மைதானத்​தில் நடந்த பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​னார்.

2-ம் கட்​ட​மாக நாளை மாலை

7 மணிக்கு மேட்​டுப்​பாளை​யத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள பொதுக்​கூட்​டத்​தில் மேட்​டுப்​பாளை​யம், கவுண்​டம்​பாளை​யம், தொண்​டா​முத்​தூர், குன்​னூர், கூடலூர், ஊட்டி ஆகிய 6 தொகு​தி​களில் போட்​டி​யிடும் திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து ஸ்டா​லின் பிரச்​சா​ரம் செய்​கிறார்.

பிரதமர் மோடி, முதல்​வர் ஸ்டா​லின் ஆகியோர் ஒரே நாளில், கோவை​யில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​வ​தால், மாநகர காவல் ஆணை​யர் என்​.கண்​ணன், மேற்கு மண்டல ஐஜி ரம்​யா​பாரதி ஆகியோர் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வருகின்​றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in