கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக சுமார் 1.5 கி.மீ உயரம் வரை, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (மே.2) ஒரு சில இடங்களிலும், நாளை மறுநாள் (மே.3) ஓரிரு இடங்களிலும், மே 4ம் தேதி ஒருசில இடங்களிலும், மே.5 முதல் மே.7ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (மே.2) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (மே.3ம் தேதி) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர் மாவட்ட மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும்,

மே.4ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மே.2) முதல் மே.5ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (மே.2) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்ப நிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 7 செ.மீ மழை, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, அம்பா சமுத்திரம், நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் | பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in