பழனிசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் 30-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலர் அழைப்பு

பழனிசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் 30-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலர் அழைப்பு
Updated on
1 min read

சென்னை: தகுதி நீக்க மனு தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் 4 பேர், பேர​வைத் தலை​வர் முன்​பு, வரும் ஜூலை 30-ம் தேதி நேரில் விளக்​கம் அளிக்க சட்​டப்​பேரவை செயலர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 47 இடங்​களில் வென்​றது. தவெக 108 இடங்​களில் வென்​றது. தவெக ஆட்​சி​யமைக்​க​வும், 5 ஆண்​டு​கள் ஆட்சி தொடர​வும் கூடு​தலாக எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவைப்​பட்​டது. அதனால் அதி​முக எம்​எல்​ஏக்​களின் ஆதரவை தவெக கோரியது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மே 13-ம் தேதி நடை​பெற்ற, முதல்​வர் விஜய் கொண்டு வந்த தவெக ஆட்சி மீதான நம்​பிக்கை கோரும் தீர்​மானத்தை சி.​வி.சண்​முகம் தலை​மையி​லான எஸ்​.பி.வேலுமணி, சி.​விஜய​பாஸ்​கர், கே.பி.அன்​பழகன், நத்​தம் விஸ்​வ​நாதன், லீமா ரோஸ் உள்​ளிட்ட 25 எம்​எல்​ ஏக்​கள் ஆதரித்து வாக்​களித்​தனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மையி​லான 22 எம்​எல்​ஏக்​கள், நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு எதி​ராக வாக்​களித்​தனர். தனது உத்​தரவை மீறி தவெக அரசுக்கு ஆதர​வளித்த 25 அதி​முக எம்​எல்​ஏக்​கள் மீது கட்​சித்​ தாவல் தடுப்பு சட்​டத்​தின் கீழ் தகு​திநீக்​கம் செய்​யக்​கோரி பழனி​சாமி தரப்​பு, பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரிடம் கடிதம் அளித்​தது.

இதனிடையே, சி.​வி.சண்​முகம் அணி​யில் இருந்த இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்), மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), சத்​ய​பாமா (தா​ராபுரம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை) ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

சி.​வி.சண்​முகம் அணியை சேர்ந்த மற்ற 21 எம்​எல்​ஏக்​கள் மன்​னிப்பு கடிதம் கொடுத்த நிலை​யில், அவர்​கள் மீதான கட்​சித் தாவல் தடுப்பு சட்ட நடவடிக்கை கோரிய தகு​தி நீக்க மனுவை பழனி​சாமி திரும்​பப் பெற்​றார்.

பழனி​சாமி அளித்த தகு​தி நீக்க மனு அடிப்​படை​யில், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் 4 பேரிடம் கடந்த ஜூலை முதல் மற்​றும் 2-ம் வாரத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் நேரில் அழைத்து விளக்​கம் கோரி​னார்.

அதனைத் தொடர்ந்து அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் 4 பேரிடம் கூடு​தல் விளக்​கம் கோர விரும்​புவ​தால், அவர்​கள் வரும் ஜூலை 30-ம் தேதி பேர​வைத் தலை​வர் அறை​யில் நேரில் விளக்​கம் அளிப்​ப​தற்​காக வர வேண்​டும் என சட்​டப்​பேரவை செயலர் இரா.​சாந்தி கடிதம் அனுப்​பி​யுள்​ளார். அப்​போது, பழனி​சாமி​யும் நேரில் வந்து விளக்​கம் அளிக்க வேண்​டும் என்று பேர​வைச்​ செயலர்​ அழைப்​பு விடுத்​துள்​ளார்​.

பழனிசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் 30-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலர் அழைப்பு
ஜோதிட நாள்காட்டி 27.07.2026 | ஆடி 11 - திங்கள்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in