தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் தேசிய நெடுஞ்​சாலைகளில் 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் உள்​ளன. இவற்​றில் சென்னை - கன்​னி​யாகுமரி, திருச்சி - சேலம், சேலம் - கோவை உள்​ளிட்ட முக்​கிய தேசிய நெடுஞ்​சாலைகளில் 60 சுங்​கச்​சாவடிகள் அமைந்​துள்​ளன.

சுங்​கச்​சாவடிகளில் ஒவ்​வொரு ஆண்​டும் 5 சதவீதம் கட்​ட​ணத்தை உயர்த்​திக் கொள்ள, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. அதன்​படி, கடந்த ஏப்​.1-ம் தேதி முதல் 60 சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் 60 சுங்​கச்​சாவடிகளை சுற்​றி​யுள்ள உள்​ளூர் சிறிய ரக வாக​னங்​களுக்​கான மாதாந்​திர கட்​ட​ண​மும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

சென்​னையை சுற்றி அதிக சுங்​கச்​சாவடிகள் உள்​ளன. சுங்​கச்​சாவடிகள் அமைந்த பகு​தி​யில் வசிக்​கும் மக்​களுக்கு சலுகை அடிப்​படை​யில் மாதாந்​திர பாஸ் வழங்​கப்​படு​கின்​றன. 20 கி.மீ. சுற்​றளவுக்கு உட்​பட்டு வசிக்​கும் மக்​களுக்கு சிறிய ரக வாக​னங்​களுக்​கான மாதாந்​திர கட்​ட​ணம் ரூ.340-ல் இருந்து ரூ.350 ஆக உயர்ந்​துள்​ளது. ஒரு சில சுங்​கச்​சாவடிகளில் ரூ.15 உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“கோயில்கள் இனி எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்” - அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in