

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
நாளை (பிப்.5) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.