பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல் - சென்னையில் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சி

பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல் - சென்னையில் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

சென்னை: அரசு பள்ளி மாணவனிட​மிருந்து கஞ்சா பொட்​டலம் பறி​முதல் செய்​யப்​பட்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை எம்​கேபி நகரில் உள்ள அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் சுற்​றுப்​புறப் பகு​தி​களை​யும் சேர்ந்த ஏராள​மான மாணவ, மாணவி​கள் பயின்று வரு​கின்​றனர்.

இந்த பள்​ளி​யில் பயிலும் ஒரு சில மாணவர்​களின் நடவடிக்​கைகள் ஆசிரியர்​களுக்கு சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. குறிப்​பாக வியாசர்​பாடியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் மீது சந்​தேகம் எழுந்​தது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காலை 9.45 மணி​யள​வில் வழக்​கம்​போல் அந்த மாணவன் பள்​ளிக்கு வந்​தான். சந்​தேகம் அடைந்த ஆசிரியர்​கள் சம்​பந்​தப்​பட்ட மாணவன் மற்​றும் அவரது உடமை​களை சோதனை செய்​த​போது ஒரு சிறிய பாக்​கெட் (5 கிராம்) கஞ்சாவை இடுப்​பில் மறைத்து வைத்​திருந்​தது தெரிந்​தது. இதையடுத்து அதை கைப்​பற்​றிய ஆசிரியர்​கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்​படைத்​தனர்.

தலைமை ஆசிரியர் இது தொடர்​பாக எம்​கேபி நகர் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தார். போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து கஞ்சாவை பறி​முதல் செய்​தனர்.

தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. பள்​ளிக்கு வந்த மாணவனிட​மிருந்து கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்ட சம்​பவம் பெற்​றோர், பொது​மக்​களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்தி உள்​ளது.

இது ஒரு​புறம் இருக்க, பள்​ளிக்கு வரும்​போது வழி​யில் கஞ்சா பொட்​டலம் கீழே கிடந்​த​தாக மாணவன் போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார். இதன் உண்​மைத் தன்மை குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல் - சென்னையில் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in