

திருவாரூர்: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 31) திருவாரூரிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி அமைச்சர் டிஆர்பி.ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ள நன்னிலம் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், அதைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலிலும் தனது பிரச்சார பயணத்தை ஸ்டாலின் திருவாரூரி லிருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, நாளை (ஏப்.1) காலை திருச்சி உழவர் சந்தை மைதானத்திலும் மாலை 5 மணியளவில் கரூர் ராயனூரிலும் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.