அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேசிய உணவுப் பாது​காப்​புச் சட்​டத்​தின்​படி முன்​னுரிமை மற்​றும் அந்​தி​யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்​டைகளின் ஆதார் விவரங்​களை சரி​பார்ப்​ப​தற்​காக மின்​னணு குடும்ப அட்​டை​யில் இணைக்​கப்​பட்ட அனைத்து பயனாளி​களின் கை ரேகை அடிப்​படையி​லான சரி​பார்ப்பை (eKYC) மேற்​கொள்ள வேண்​டும் என மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தற்​போதைய நில​வரப்​படி, முன்​னுரிமை குடும்ப அட்​டைகளில் 96.57 சதவீதம் இப்​பணி மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்த இ-கேஒய்சி பதிவை 100 சதவீதம் நிறைவு செய்​யும் பொருட்டு தமிழகத்​தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளி​லும் (இடைத்​தேர்​தல் நடை​பெறும் மது​ராந்​தகம், தாராபுரம் பகு​தி​களில் உள்ள ரேஷன் கடைகள் நீங்​கலாக) 26-ம் தேதி (இன்​று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடை​பெறவுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு தவெக துணை பொதுச் செயலாளர் பதவி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in