உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார்

ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம்
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார்
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா நேற்றுடன் பணிஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதை ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மதியம் 12.30 மணி்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த அர்விந்த் ஹெச்.தர்மாதிகாரி மற்றும் மறைந்த சுபா தர்மாதிகாரிக்கு கடந்த 1966 ஜூலை 8 அன்று பிறந்த நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1992-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த 2000 -2015 காலகட்டத்தில் வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றிய அவர், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2018-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு ஏப்ரலில் கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 மார்ச் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in