

மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் செலவான நிலை மாறும். சேமிக்கும் முயற்சியில் இறங்குவீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுது நீங்கும். குழப்பங்கள் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மிதுனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. குழப்பம் நீங்கி அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
கடகம்: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: வீடு, வாகனத்தை சீர் செய்வீர். கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
கன்னி: எதிலும் நிதானமாக செயல்படவும். குடும்பத்தில் மூத்தோரின் அறிவுரையை ஏற்கவும். தம்பதிக்குள் அனுசரித்து போவது நல்லது. வியாபார போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
துலாம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். உடல் நலம் சீராக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக சிறு சிறு அலைச்சல் உண்டு. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் ஏற்றம்காண்பீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
தனுசு: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
மகரம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் கிட்டும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபார போட்டி குறையும். ஓரளவு லாபம் பார்க்கலாம். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலக ரீதியாக பயணம் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை.