குழந்தைகள் தினம்: பள்ளி மாணவர்களுக்கு இன்று கேக் - கொளத்தூரில் தொடங்குகிறார் முதல்வர்

குழந்தைகள் தினம்: பள்ளி மாணவர்களுக்கு இன்று கேக் - கொளத்தூரில் தொடங்குகிறார் முதல்வர்
Updated on: 
1 min read

சென்னை: நவம்​பர் 14-ம் தேதி ஆண்​டு​தோறும் குழந்​தைகள் தின​மாகக் கொண்​டாடப்​படு​கிறது.

இதையொட்​டி, நடப்​பாண்டு பள்ளி மாணவர்​களுக்கு மதிய சத்​துணவுடன் கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்​தது.

இதற்​காக தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் மூலம் கடந்த அக்​டோபர் 11-ம் தேதி ரூ.9.27 கோடி மதிப்​பில் குறுகிய கால டெண்​டர் வெளி​யிடப்​பட்​டது.

இதன் அடிப்​படை​யில் 4 பிரபல நிறு​வனங்​களுக்கு கேக் விநி​யோக ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்டு சுமார் 45 கிராம் மதிப்​புடன் மொத்​தம் 62 லட்​சத்து 46 ஆயிரத்து 412 கேக் பாக்​கெட்​டு​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதில் பிரிட்​டானியா நிறு​வனம் 45 கிராம் எடை​யுள்ள 10 லட்​சத்து 3,996 கேக்​கு​களை​யும், ட்ரீம் பேக் நிறு​வனம் 45 மற்​றும் 50 கிராம் எடை​யுள்ள 33 லட்​சத்து 87,459 கேக்​கு​களை​யும் வழங்கி உள்​ளது.

எலைட் நேச்​சுரல் நிறு​வனம் 45 கிராம் எடை​யுள்ள 10 லட்​சத்து 6,861 கேக்​கு​களை​யும், ஐடிசி நிறு​வனம் 43.2 கிராம் எடை​யுள்ள 8 லட்​சத்து 48,096 கேக்​கு​களையும் தயாரித்​துள்​ளது.

தமிழகத்​தில் முதல்​முறை​யாக குழந்​தைகள் தினத்​தையொட்டி அரசு சார்​பில் முதல்​வர் விஜய் இன்று காலை 9 மணிக்கு கொளத்​தூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்​ளி​யில் மாணவ, மாணவி​களுக்கு கேக்​கு​களை வழங்கி தொடங்கி வைக்​கிறார்.

முதலில் இந்த திட்​டத்தை அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் முதல்​வர் விஜய் தொடங்கி வைப்​பார் என்று எதிர்பார்க்​கப்​பட்​டது. ஆனால், கொளத்​தூருக்​குத் தற்​போது மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

கொளத்​தூரில் தொடங்கி வைக்​கப்​படும் அதே நேரத்​தில், தமிழகம் முழு​வதும் மாணவர்​களுக்கு கேக் வழங்​கப்பட இருக்​கிறது. இதில் சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் 2.90 லட்​சம் மாணவர்​களுக்கு கேக் மற்​றும் வாழ்த்து அட்டை வழங்​கப்​படு​கிறது.

குழந்தைகள் தினம்: பள்ளி மாணவர்களுக்கு இன்று கேக் - கொளத்தூரில் தொடங்குகிறார் முதல்வர்
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.149 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

X