தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.149 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.149 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
Updated on: 
1 min read

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவுரையின்படி, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும், 17,707.10 ஏக்கர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அவற்றில் 13,233 எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.

கோயில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகள் மூலம் வரவேண்டிய கேட்பு, வசூல் மற்றும் நிலுவைத் தொகைகளில் ரூ.213 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயில்களுக்குச் சொந்தமான 34.82 ஏக்கர் நிலங்களுக்கு 15 கோயில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்து பெறப்பட்டுள்ளது.

கணினி சிட்டாவில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக வருவாய்த்துறை கோட்டாட்சியர்களிடம் முறையீடுகள் செய்யப்பட்டு, அதன்மூலம் 262 ஏக்கர் நிலங்கள் 226 கோயில்களின் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன.

வாடகை நிலுவைத் தொகை

வாடகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.149 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது

X