6,574 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வுகள் அறிவிப்பு

ஜனவரி 10-ல் எழுத்துத் தேர்வு
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்பிஎஸ்சி நேற்றிரவு வெளி​யிட்​டது. இதன்மூலம் 6,574 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி நேற்று வெளி​யிட்ட அறிவிப்பு: ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பு டிஎன்பிஎஸ்சி வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி அக்டோபர் 6-ம் தேதி வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இத்தேர்வுக்கு அக்.6 முதல் நவம்பர் 5 வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடை​பெறும். கூடு​தல் விவரங்​களைத் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) அறிந்​து ​கொள்​ளலாம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் உதவியாளர், பில் கலெக்டர், வனக் காவலர் உள்​ளிட்ட பதவி​களில் 6,574 காலி பணி​யிடங்​கள் நிரப்​பப்பட உள்ளன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ரஜினியின் பக்கபலத்துடன் அரசியலில் களம் இறங்குகிறார் தனுஷ்: 2031 தேர்தலில் போட்டியிட திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in