குரூப்-2 மெயின் தேர்வு விடைத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2 மெயின் தேர்வு விடைத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: டிஎன்​பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்​வுக்​கான விடைத்​தாள்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தேர்​வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.ஸ்ரீவெங்​கடபிரியா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி நடை​பெற்ற குரூப்​-2, 2ஏ மெயின் தேர்வில் கட்​டாயத் தமிழ்மொழித் தாள் விடைத்​தாள்​கள், பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்ற பொது அறிவுத் தாள் விடைத்​தாள்​கள் ஆகியவை தேர்​வாணை​யத்​தின் அதிகாரப்பூர்வ இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

விடைத்​தாள் தேவைப்​படும் தேர்​வர்​கள் தங்​களது ஒரு​முறை பதிவு வாயி​லாக உரிய கட்​ட​ணத்தை செலுத்தி ஆன்​லைனில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி அடுத்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி வரை நடை​முறை​யில் இருக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

குரூப்-2 மெயின் தேர்வு விடைத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
“மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது” - அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in