டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு: பழைய பாதை, பழைய பாணி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு: பழைய பாதை, பழைய பாணி!
Updated on: 
2 min read

எப்​போதும் போல, தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம், சிறந்த முறை​யில் குரூப் 1 முதல்​நிலைத் தேர்வை நடத்தி முடித்​துள்​ளது. அநேக​மாக எங்​கும் யாரும் குறை கூற முடி​யாத அளவுக்கு நன்கு திறம்பட நடத்​தி​யுள்ள தேர்​வாணை​யம் பாராட்​டுக்கு உரியது. வாழ்த்​துகள்.

எடுத்த எடுப்​பிலேயே ஓர் உண்​மை​யைச் சொல்​லித்​தான் ஆக வேண்​டும் - குரூப் ஒன் முதல் நிலை தேர்வு வினாத்​தாள், மன்​னிக்​க​வும், மிகுந்த ஏமாற்​றம் அளிக்​கிறது. சர்​வ​தேச நடப்​பு​கள் முற்​றி​லு​மாக விலக்கி வைக்​கப்​பட்​டது, அறி​வியல் தொழில்​நுட்ப முன்​னேற்​றங்​கள் குறிப்​பிடத்​தக்க அளவில் இடம் பெறாதது, பொருளா​தார சீர்​திருத்த நடவடிக்​கைகள் புறக்​கணிக்​கப் பட்​டது, சமூகம் - கலை - விளை​யாட்​டுத் துறைச் செய்​தி​களை மிக மேலோட்​ட​மாகக் கையாண்​டது... இது குரூப் 1க்​கான தேர்வு என்று ஏற்​றுக்​கொள்ள மனம் மறுக்​கிறது.

ஓரிரு வினாக்​கள் தவிர்த்​து, பெரும்​பாலான கேள்வி​கள், ‘எப்​போதோ’ தயாரிக்​கப்​பட்​டது போல் தெரி​கிறது. கேள்வி கேட்​ப​தில் ஏன் இத்​தனை வறட்​சி...? புரியவே இல்​லை. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம், மத்​திய மாநில அரசுத் திட்​டங்​கள், இந்​திய வரலாறு, தமிழக அரசி​யல், தமிழ் இலக்​கியப் பகு​தி​கள்.. வழக்​கம் போல் கணிச​மான அளவில் இடம் பெற்​றுள்​ளன. பழகிய தேர்​வர்​களுக்கு இது நிச்​ச​யம் மகிழ்ச்​சி​யைத் தரும்.

மொழிபெயர்ப்பு - அயற்சி தரு​கிறது. மிக உறு​தி​யாய், தமிழ் மொழி இத்​தனை கடின​மானது அல்ல. எவராலும் எளி​தில் புரிந்து கொள்ள முடி​யாத, மொழிபெயர்ப்பு வாசகங்​கள் சில - நம் வாசகருக்​காக: ‘டிஜிட்​டல் உலர் தாவரத் தொகுப்​புத் தரவுத் தளங்​கள் வகைப்​பட்​டியல் குறிப்​பு​கள்’, ‘ஒரு மாதிரி​யின் வரலாற்​றுச் சேகரிப்​புத் தேதி’ ‘சார்​பின்றி தனித்து ஒதுங்​கும் கேமீட்​டு​களை உள்​ளிடு​கின்​றன’.

அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தில் இடம் பெறுகின்ற இந்த மொழிபெயர்ப்​பு​கள் அரசின் ‘அங்​கீ​காரம்’ பெற்​றவை தானா..? ஒரு சில தேர்​வர்​கள் அவர்​களுக்கு தோன்​றியதை எழு​தி​னால் அது எப்​படி பொது​வான மொழிபெயர்ப்பு ஆகும்​..?

அதேசம​யம், ‘கமென்​சலிசம்’ ‘மி​யுக்​காலிஸம்’, ‘அமென்​சலிஸம்’ - என்று ஆங்​கிலச் சொற்​கள் அப்​படியே தமிழ் எழுத்​துகளில்! இது தொடர்​பாக ஆணை​யம் சற்றே கூடு​தல் கவனம் செலுத்​தி​னால் சிறப்​பாக இருக்​கும். அரசமைப்பு சட்ட 42வது திருத்​தம், 104வது திருத்​தம், நாடாளு​மன்​றத்​தில் பண மசோதா தாக்​கல், ஆளுநரின் அதி​காரங்​கள், கூட்​டாட்​சித் தத்​து​வம், நெருக்​கடி நிலை செயல்​பாடு, ‘லோக்​பால்’, ‘லோக் அயுக்​தா’, ‘யுபிஎஸ்​சி’, தகவல் உரிமைச் சட்​டம், சாதி​வாரிக் கணக்​கெடுப்பு ‘எச்ச அதி​காரங்​கள்’ (‘மிச்ச அதி​காரங்​கள்’ - இன்​னும் நன்​றாக இல்​லை​யா?) மீதான கேள்வி​கள், மனநிறை​வைத் தரு​கின்​றன.

இயற்கை வேளாண்​மை, வைக்​கோல் புரட்​சி, தேசிய பசுமை இல்ல வாயு வெளி​யேற்​றம், நானோ யூரியா தொடர்​பான வினாக்​கள் உண்​மை​யில் மெச்​சும் படி இருந்​தன. பாராட்​டு​கள். கூட்டு வட்​டி, தனி​நபர் வரு​மானம், சராசரி, உண்​மைக் கூற்​றுகள் உள்​ளிட்ட கேள்வி​கள் வழக்​க​மான முறை​யில், சுமா​ராக இருந்​தா​லும், பெரி​தாகக் குறை சொல்ல ஏதும் இல்​லை.

இரும்​புத்​தாது, ‘மேக்​னைட்’, நைட்​ரேட், பாதரச நோய்​கள், நாசா ஆய்​வகம், தமிழ்​நாடு மாநில மகளிர் ஆணை​யம், பொருநை அகழாய்​வு, வேலூர் கிளர்ச்சி தொடர்​பான வினாக்​கள் - எதிர்​பார்த்​தவைதான் என்​றாலும், வரவேற்​கத் தக்​கன. வினாத்​தாளின் தரம் பெரிதும் சரிந்து போனதற்​குக் காரண​மான வினாக்​கள், எண்​ணிக்​கை​யில் மிக அதி​கம்.

அதி​கம் அறியப்​ப​டாத ஒரு விருதுக்​கான பரிசுத் தொகை எவ்​வளவு, ‘இவ்​வாறு பாராட்​டப்​படு​பவர்’ யார், அந்​தக் காலத்​திலேயே அதி​கம் வாசிக்​கப்​ப​டாத இதழ்​களின் பெயர்​கள், ஆசிரியர்​கள்​...

பத்​துக்​கும் மேற்​பட்ட வினாக்​களில் ‘ஆண்​டு​கள்’, ‘கால வரிசை’, தனி நபர்​களை உயர்த்​திப் பிடிக்​கும் புகழுரைகள்​... மன்​னிக்​க​வும், குரூப் 1 பணிக்​கான தேர்​வுக்கு உகந்​தவை அல்ல.

புது​மை​யான சுவாரஸ்​யம் மிக்க கேள்வி என்று எது​வும் தென்​பட​வில்​லை. மாறிவரும் உலக அறி​வுச் சூழல், பணித் தேவை​களைக் கருத்​தில் கொண்​டு,போட்டித் தேர்வு வினாத்​தாள்​களை வடிவ​மைக்க வேண்​டியதன் அவசி​யத்​தைத் தேர்​வாணை​யம் உணர்ந்து செயல்​படுத்​தி​னால் மிகச் சிறப்​பாக இருக்​கும்.

பொது​வாகச் சொல்​கிறோம் - ஒரு குறிப்​பிட்ட அரசி​யல் கலாச்​சா​ரத்தை வலி​யுறுத்​தும் களமாக போட்​டித் தேர்​வு​கள் / பொதுத் தேர்​வு​கள் அமைவது நல்​லதல்ல. அகில இந்​திய அளவில், சர்​வ​தேசத்தரங்​களில் போட்​டி​யிட்டு வெல்​லும்​ அறி​வுத்​திறன்​ மிகுந்​தவர்​கள்​ தமிழக இளைஞர்​கள்​. இதற்​கு ஏற்​ப, தேர்​​வாணை​யம்​ தனது தேர்​வு​களில்​, உயர்​தரத்​தை நிர்​ண​யித்​து, உறுதி செய்​​தால்​ - அத்​தனை பேருக்​கும்​ நல்​லது.

நம்​புவோம்​ - ‘நல்​லதே நடக்​கும்​’!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு: பழைய பாதை, பழைய பாணி!
கரூர் நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவேந்தல்: குடும்பத்தினர், தவெகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in