துணை ஆட்சியர் உள்ளிட்ட 46 காலி பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வை 1.65 லட்சம் பேர் எழுதினர்

2 மாதத்தில் முடிவு வெளியிடப்படும்
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்சிடிஎம் பள்ளியில் தேர்வு எழுத வந்த தேர்வர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்சிடிஎம் பள்ளியில் தேர்வு எழுத வந்த தேர்வர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on: 
1 min read

சென்னை: துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சி உதவி இயக்​குநர் உள்​ளிட்ட பதவி​களுக்​கான குரூப்-1 முதல்​நிலைத்​தேர்வை 1.65 லட்​சம் பேர் எழு​தினர்.

வரு​வாய் கோட்​டாட்​சி​யர் (துணை ஆட்​சி​யர்), ஊரக வளர்ச்சி உதவி இயக்​குநர், வணிக வரி உதவி ஆணை​யர், கூட்​டுறவு சங்​கங்​களின் துணை பதி​வாளர், தொழிலா​ளர் நல உதவி ஆணை​யர் உள்​ளிட்ட பதவி​களில் 46 காலி​யிடங்​களை நிரப்​புவதற்கு டிஎன்​பிஎஸ்சி கடந்த ஜூன் 23-ம் தேதி குரூப்-1 தேர்​வுக்​கான அறி​விப்பை வெளி​யிட்​டது. ஒரு லட்​சத்து 27 ஆயிரத்து 44 ஆயிரம் பெண்​கள் உள்பட 2 லட்​சத்து 23 ஆயிரம் பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர்.

முதல் கட்ட தேர்​வான முதல்​நிலைத்​தேர்வு செப்​டம்​பர் 27-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிரு்தது. அதன்​படி, குரூப்-1 முதல்​நிலைத்​தேர்வு தமிழகம் முழு​வதும் நேற்று 38 மையங்​களில் நடந்​தது. காலை 9.30 மணி முதல் மதி​யம் 12.30 மணி வரை நடை​பெற்ற பொது அறிவு தாள் தேர்வை ஒரு லட்​சத்து 65 ஆயிரத்து 828 பேர் எழு​தினர். தேர்​வுக்கு விண்​ணப்​பித்​தவர்​களில் 57 ஆயிரத்து 612 பேர் (25.78 சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை.

சென்​னை​யில் அரும்​பாக்​கம் எம்​எம்​டிஏ காலனி அரசு மாதிரி மேல்​நிலைப்​பள்​ளி, தி.நகர் வித்​யோதயா பெண்​கள் மேல்​நிலைப்​பள்​ளி, கோடம்​பாக்​கம் எம்​ஜிஆர் மேல்​நிலைப்​பள்​ளி உள்பட 12 இடங்​களில் தேர்வு நடை​பெற்​றது. 37 ஆயிரம் பேர் தேர்​வில் கலந்​து​கொண்​டனர்.

காலி​யிடங்​களின் எண்​ணிக்கை: சேத்​துப்​பட்டு சென்னை கிறிஸ்​தவக் கல்​லூரி மேல்​நிலைப்ப பள்ளி தேர்வு மையத்​தில் டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் காலை 9 மணிக்கு நேரில் ஆய்வு செய்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “குரூப்-1 முதல்​நிலைத்​தேர்வு முடிவு 2 மாதங்​களில் வெளி​யிடப்​படும். தற்​போது 46 காலிப்​பணி​யிடங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. காலி​யிடங்​களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது” என்​றார்.

மெயின் தேர்​வு: யுபிஎஸ்சி நடத்​தும் சிவில் சர்​வீஸ் தேர்​வைப் போலவே டிஎன்​பிஎஸ்சி குரூப்-1 தேர்​வும் முதல்​நிலைத்​தேர்​வு, மெயின்​தேர்​வு, நேர்​முகத்​தேர்வு என 3 நிலைகளை உள்​ளடக்​கியது. ஒரு காலி​யிடத்​துக்கு 20 பேர் என்ற விகி​தாச்​சார அடிப்​படை​யில் முதல்​நிலைத்​தேர்​வில் இருந்து மெயின் தேர்​வுக்கு தேர்​வர்​கள் தேர்​வுசெய்​யப்​படு​வர்.

அந்த வகை​யில் தற்​போது காலி​யிடங்​கள் 46 ஆக அறிவிக்​கப்​பட்​டிருப்​ப​தால் 920 பேர் மெயின் தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​படு​வர். காலி​யிடங்​களின்​ எண்​ணிக்​கை அதி​கரிக்​கும்​ பட்​சத்தில் இந்த எண்ணிக்கையும் கூடும்.

<div class="paragraphs"><p>டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்சிடிஎம் பள்ளியில் தேர்வு எழுத வந்த தேர்வர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு: பழைய பாதை, பழைய பாணி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in