

சசிகலாவை நிச்சயம் சந்திக்க மாட்டேன் என மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். அமமுகவுடன் கூட்டணி குறித்துகட்சித் தலைமைதான் முடிவுஎடுக்க வேண்டும். ஆனால்,அதுபோன்று முடிவெடுக்கும் நிலையில் கட்சித் தலைமை இல்லை. சசிகலாவை நிச்சயம் சந்திக்க மாட்டேன் என்றார்.